‘ஐரோப்பாவில் நடந்த கொடூர இனப்படுகொலை’- போர்க்குற்றவாளி Ratko Mladic ஐ.நா.சிறையில் காலமானார்
போஸ்னியப் போரின் (1992-1995)போது இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக வாழ்நாள் சிறைத்தண்டனையை எதிர்நோக்கிவந்த போஸ்னிய செர்பிய முன்னாள் படைத்தளபதி ரட்கோ ம்லாடிச் (Ratko Mladic) தனது 84வது வயதில் காலமானார். நெதர்லாந்தின் Hague நகரிலுள்ள ஐ.நா சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். ஸ்ரெப்ரெனிக்கா இனப்படுகொலை 1995- ஆம் ஆண்டு ஐ.நா-வால் ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என அறிவிக்கப்பட்ட ஸ்ரெப்ரெனிக்காவில் 8,000-க்கும் மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்கள் மற்றும் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இவரே பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளார். […]













