இலங்கை

குருந்தூர் மலைக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்க தீர்மானம்

முல்லைத்தீவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க குருந்தூர் மலையில் பொலிஸ் பாதுகாப்பை கொண்டுவர புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அங்கு பொலிஸ் இருப்பை மீண்டும் ஏற்படுத்தக் கோரி, அக்கோயிலின் தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்துக்குரிய கல்கமுவே சந்தபோதி தேரர் அமைச்சுக்குக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், 

குருந்தூர்  வளாகத்தில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்காக தங்கியிருந்ததுடன், தொல்பொருள் பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் பணியையும் அவர்கள் மேற்கொண்டு வந்ததனர்.

இவ்வாறான பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்து மீளழைத்தமையால் தொல்பொருட்கள், தொல்பொருள் காப்பகம் மற்றும் வனப் பாதுகாப்புப் பகுதி என்பன கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன .

அதேநேரம் பல்வேறு குழுக்கள்  போராட்டங்களுக்காக வருகை தந்தபோதிலும்,அவற்றைத் தடுப்பதற்கான சிவில் பாதுகாப்பு அதிகாரம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே உள்ளது.

எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்து மீளழைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை மீண்டும் சேவைக்கு அமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கடிதத்திற்கு அமைய பாதுகாப்பு பணிக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை அனுப்ப புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்