யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன், ஆஸ்திரேலியா பேச்சு நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று  ஆஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge)  வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: நீதிகோரி ஆஸ்திரேலிய செனட் சபையில் ஒலித்த குரல்

  • August 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன், ஆஸ்திரேலியா பேச்சு நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று  ஆஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge)  வலியுறுத்தியுள்ளார். “இலங்கைக்கு இது புதியதொரு கதையல்ல. நாடு முழுவதிலும் உள்ள சுமார் 20 மனிதப் புதை குழிப் பகுதிகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) ஆவணப்படுத்தியுள்ளது. ஆனால் அவற்றில் ஒன்று கூட இதுவரை முழுமையாக விசாரணை செய்து முடிக்கப்படவில்லை” என செனட்டர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச […]

உலகம்

நேபாளத்தில் இடம்பெற்ற பேரழிவுக்கு காலநிலை மாற்றமே காரணம்

  • August 28, 2026
  • 0 Comments

நேபாள-திபெத் எல்லையில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து காணாமல் போன 1,400-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காலநிலை மாற்றம் உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகளை உருகச் செய்து, பனிப்பாறை ஏரிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பனிப்பாறை சரிவுகளின் அபாயங்களை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவுகளே நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதற்கிடையே பேரழிவில் சிக்கிய […]

நேபாளம் மற்றும் சீனா கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லைப் பகுதியில், இமயமலை ஆற்றில் ஏற்பட்ட பிரம்மாண்ட பாறை மற்றும் சேறு சரிவு காரணமாக உருவான பேரழிவு வெள்ளத்தில் 390-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உலகம் செய்தி

392சடலங்கள் மீட்பு: 1,500 பேர் தொடர்ந்து மாயம்

  • August 28, 2026
  • 0 Comments

நேபாளம் மற்றும் சீனா கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லைப் பகுதியில், இமயமலை ஆற்றில் ஏற்பட்ட பிரம்மாண்ட பாறை மற்றும் சேறு சரிவு காரணமாக உருவான பேரழிவு வெள்ளத்தில் 390-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை அன்று மீட்புக் குழுவினர் சேற்றில் இறங்கித் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேபாளத்தில் மட்டும் குறைந்தபட்சம் 392 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்டை பிராந்தியமான திபெத்தில் குறைந்தது மூன்று பேர் […]

இலங்கை

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை நிதியுதவி

  • August 27, 2026
  • 0 Comments

நேபாளத்தைத் தாக்கிய திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த நிதியுதவி வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரணத்தையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் மக்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து ஜனாதிபதி தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் […]

ஐரோப்பா

உக்ரைனின் 09 நகரங்கள் மீது ரஷ்யா கோர தாக்குதல்

  • August 27, 2026
  • 0 Comments

உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு குண்டுமழை பொழிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் இன்று அதிகாலை வரை நீடித்துள்ளது. ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொள்ளக்கூடிய அமெரிக்கத் தயாரிப்பான பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்கு கடும் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம்  மொஸ்கோவின் அதிவேக ஜெட்-இயந்திர ஆளில்லா விமானங்கள் மற்றொரு சவாலை ஏற்படுத்தியதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே உக்ரைனும் ரஷ்ய […]

ஐரோப்பா

பெர்லினுக்கு அருகில் இரு சடலங்கள் மீட்பு – சந்தேகநபர் ஒருவர் கைது

  • August 27, 2026
  • 0 Comments

பெர்லினுக்கு அருகிலுள்ள கோசென்-நியூ சிட்டாவ் Gosen-Neu Zittau நகரில்  இருவர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாக செய்தி தாள் ஒன்று தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அப் பாடசாலையில் பயின்ற 18 வயதுப் பெண் என்றும், சந்தேகிக்கப்படும் குற்றவாளி அவரது 19 வயதுடைய முன்னாள் காதலன் என்றும் நம்பப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் தாக்குதலை தடுக்க முயன்ற 30 வயதுடைய நபர் ஒருவரும் […]

ஐரோப்பா

அணுவாயுதங்களை வைத்திருக்க விரும்பவில்லை – போலந்து திட்டவட்டம்

  • August 27, 2026
  • 0 Comments

போலந்து தனது மண்ணில் அணு ஆயுதங்களை வைத்திருக்க விரும்பவில்லை என்று பாதுகாப்புத் துணை அமைச்சர் பாவெல் சலேவ்ஸ்கி Pawel Zalewski இன்று அறிவித்தார். அணுவாயுதங்கள் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இதைத்தான் நான் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூற விரும்புகிறேன். போலந்து தனது மண்ணில் அணு ஆயுதங்களை வைத்திருக்க விரும்பவில்லை,” எனக் குறிப்பிட்டார். “நாங்கள் நேட்டோவின் அணுசக்தித் தடுப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்புகிறோம், ஆனால் அதன் அர்த்தம் எங்கள் மண்ணில் அணு ஆயுதங்களை வைத்திருப்பது அல்ல,” என்று […]

உலகம்

உகாண்டா எபோலா தொற்றற்ற மண்டலமாக அறிவிப்பு

  • August 27, 2026
  • 0 Comments

உகாண்டாவில் கடந்த  42 நாட்களாகப் புதிய எபோலா நோய்த்தொற்று எதுவும் பதிவாகாத நிலையில், அந்நாட்டை எபோலா அற்ற மண்டலமாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இன்று இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “கடைசியாக உறுதிசெய்யப்பட்ட, வெளிநாட்டிலிருந்து வந்த எபோலா நோயாளி 16 ஜூலை 2026 அன்று குணமடைந்து வீடு திரும்பியதிலிருந்து 42 நாட்களை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அந்த நோயாளியுடன் தொடர்புடைய […]

ஐரோப்பா

இத்தாலியில் சிறிய ரக விமானம் விபத்து – இருவர் பலி

  • August 27, 2026
  • 0 Comments

இத்தாலியில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் வடக்கு பியட்மாண்ட் Piedmont  பகுதியில் உள்ள அன்ட்ரோனா ஷியரன்கோவில் Antrona Schieranco , காம்ப்ளிசியோலி Campliccioli  அணைக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஷ ஆட்டோகைரோ அல்லது கைரோகாப்டர் வகையைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் குறித்த விமானம், கேபிள் காருக்குச் சொந்தமான கேபிள்களில் மோதிய பின்னர் தீப்பிடித்து எறிந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விபத்தில் 63 வயதுடைய பொறியாளர் மற்றும், அவருடைய 63 வயதுடைய நண்பர் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘ஐரோப்பாவில் நடந்த கொடூர இனப்படுகொலை’- போர்க்குற்றவாளி Ratko Mladic ஐ.நா.சிறையில் காலமானார்

  • August 27, 2026
  • 0 Comments

போஸ்னியப் போரின் (1992-1995)போது இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக வாழ்நாள் சிறைத்தண்டனையை எதிர்நோக்கிவந்த போஸ்னிய செர்பிய முன்னாள் படைத்தளபதி ரட்கோ ம்லாடிச் (Ratko Mladic) தனது 84வது வயதில் காலமானார். நெதர்லாந்தின்  Hague நகரிலுள்ள ஐ.நா சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். ஸ்ரெப்ரெனிக்கா இனப்படுகொலை 1995- ஆம் ஆண்டு ஐ.நா-வால் ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என அறிவிக்கப்பட்ட ஸ்ரெப்ரெனிக்காவில் 8,000-க்கும் மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்கள் மற்றும் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இவரே பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளார். […]