ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

RAF Fairford விமான தளம்மீது தாக்குதல் முயற்சி: ஈரானே காரணம் – UK பிரதமர் திட்டவட்டம்

பிரித்தானியாவின் RAF Fairford விமான படைத் தளத்தை குறிவைத்து நடத்தத் திட்டமிடப்பட்ட தாக்குதலுக்கு ஈரானே காரணம் என்று பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் Andy Burnham திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் RAF Fairford விமான படைத் தளத்தை குறிவைத்து நடத்தத் திட்டமிடப்பட்ட தாக்குதலுக்கு ஈரானே காரணம் என்று பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் Andy Burnham திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவின் போர் விமானங்கள் பயன்படுத்திய தென்மேற்கு பிரித்தானியாவில் உள்ள RAF Fairford தளத்திற்கு அருகில், பயங்கரவாதம் மற்றும் வெடிபொருள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி அதிகாலையில் ஐந்து பிரித்தானிய பிரித்தானிய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் Andy Burnham , “இந்தச் சதி ஈரானில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினால் (IRGC) வழிநடத்தப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம் என்ற எங்கள் மதிப்பீட்டை நான் உறுதிப்படுத்துகிறேன்” என்று கூறினார்.

எனினும், RAF Fairford சம்பவத்தில் தங்களுக்கு எவ்விதப் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ள தெஹ்ரான், இது “ஆதாரமற்ற மற்றும் தீங்கிழைக்கும் கற்பனை” என்று கூறி இக்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.

இந்த ந்தேகத்திற்குரிய சதித் திட்டம் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. கைது செய்யப்பட்ட ஐந்து பிரித்தானிய பிரஜைகளும் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும், ஈரான் வம்சாவளி நபர் உட்பட கைது செய்யப்பட்ட மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் பெட்ரோல் மட்டுமே கண்டெடுக்கப்பட்டதாகவும், வெடிமருந்துகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், காவல்துறையும் பிரதமர் பர்ன்ஹாமும் இதில் வெளிநாட்டுச் சக்தியின் தலையீடு இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“எங்கள் மண்ணில் இத்தகைய அச்சுறுத்தல்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். குற்றவியல் வலைப்பின்னல்களை ஈரான் பயன்படுத்துவதை கடுமையான அதிகாரங்களைப் பயன்படுத்தி முடக்குவோம். மேலும், ஈரானும் ஐ.ஆர்.ஜி.சி (IRGC) அமைப்பும் நமக்குத் தீங்கு விளைவிக்கும் திறனைக் கட்டுப்படுத்த கூடுதல் தடைகளை விதிப்போம்” என்று Andy Burnham எச்சரித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி