Brexit-இற்கு பின் உள்ள உறவுகள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்து
பிரெக்ஸிட்டுக்குப் பின்பு பிரித்தானியாவின் உறவை மறுபரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆண்டி பர்னம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம்-ஐக்கிய ராச்சிய உச்சி மாநாட்டிற்கு முன்னதாகப் பேசிய பிரதமர், இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், பிரஸ்ஸல்ஸுடன் சிறந்த நிபந்தனைகளைப் பேச்சுவார்த்தை மூலம் பெறுவதற்கான வாய்ப்பைப் புறக்கணிப்பது கடமைத் தவறுவதற்கு சமம் எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம்-ஐக்கிய ராச்சிய உச்சி மாநாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தங்கள் 2040-ஆம் ஆண்டுக்குள் பிரித்தானிய பொருளாதாரத்தை ஆண்டுக்கு £10 பில்லியனுக்கும் மேலாக உயர்த்தக்கூடும் என்று அரசாங்கத்தின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புவாத ‘மேட் இன் யூரோப்’ முன்முயற்சி தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் எனவும் கூறப்படுகிறது.




