புதிய உலக சாதனை படைத்தார் ஸ்டீவ் ஸ்மித்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் முடிவில், ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையை எட்டியுள்ளதுடன், நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் களத்தடுப்பில் அதிக கேட்சுகளை Catches பிடித்த புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின் தொடக்கத்தில் 219 கேட்சுளுடன் இங்கிலாந்தின் ஜோ ரூட்டுடன் சமநிலையில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், நேற்று ஒரே நாளில் நான்கு கேட்சுகளை பிடித்து தனது மொத்த கேட்சுகளின் எண்ணிக்கையை 223 ஆக உயர்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் பிடித்துள்ள 223 கேட்சுகள் என்பது, டெஸ்ட் வரலாற்றில் விக்கெட் காப்பாளர்கள் அல்லாத களத்தடுப்பாளர்களில் மிகச்சிறந்த சாதனையாகும் (இதுவரை 11 விக்கெட் காப்பாளர்களைத் தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களின் எண்ணிக்கையையும் விட இது அதிகமாகும்).
நான்காவது நாள் ஆட்ட நேர முடிவின்போது தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. வெற்றிபெறுவதற்கு தென்னாபிரிக்கா அணிக்கு 319 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன. ஆஸ்திரேலிய அணி வெல்வதாயின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும். இப்போட்டியில் ஆஸி. அணியின் கை மேலோங்கியுள்ளது.




