இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி கனடா செல்கின்றார். கனடாவிலுள்ள இந்திய தூதரகம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியா செய்தி

புத்துயிர் பெறும் ராஜதந்திர உறவு: பிரதமர் மோடி கனடா பயணம்

  • October 17, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி கனடா செல்கின்றார். கனடாவிலுள்ள இந்திய தூதரகம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியும், கனடா பிரதமர் மார்க் கார்னியும் அண்மையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள நேர்மறையான உத்வேகத்தைத் தொடர இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். மேலும் வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் மக்கள் இடையேயான உறவுகள் ஆகியவற்றில் உறுதியான பலன்களை அடைய […]

இலங்கை

50 சதவீதமான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது

  • October 17, 2026
  • 0 Comments

திடீர் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 50% பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மின் அமைப்பு இயக்குனர் (தனியார்) நிறுவனம் தெரிவித்துள்ளது. மின் பரிமாற்ற வலையமைப்பில் ஏற்பட்ட ஒரு பெரிய அமைப்பு கோளாறு காரணமாக, இன்று (17) காலை சுமார் 11.45 மணியளவில் தீவு முழுவதும் மின் விநியோகம் தடைபட்டது. இதற்கிடையில், திடீர் மின்வெட்டால் தடைபட்ட மின் விநியோகம் இன்று மாலைக்குள் மீண்டும் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக தேசிய மின் அமைப்பு இயக்குனர் (தனியார்) நிறுவனம் […]

இலங்கை

நாடு முழுவதும் திடீர் மின் துண்டிப்பு

  • October 17, 2026
  • 0 Comments

நாடு முழுவதும் இன்று திடீரென மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் மின் விநியோகத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இன்று (17) மாலை சுமார் 6:30 மணியளவில் தேசிய மின் கட்டமைப்பை முழுமையாகச் சீரமைக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் தேசிய மின் கட்டமைப்புச் செயல்பாட்டு மையம் (NSO) தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உரிய நடைமுறையின்படி நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.    

பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். செய்தி பொழுதுபோக்கு

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: ஐரோப்பாவில் சங்கமம்

  • October 17, 2026
  • 0 Comments

பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது துள்ளலான இசையால் இளம் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ள இசையமைப்பாளர் அனிருத், திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவரது இசையில் அண்மையில் வெளியான ‘ஜெயிலர்-2’ திரைப்படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே அனிருத் – காவ்யா […]

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.  செய்தி பொழுதுபோக்கு

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்

  • October 17, 2026
  • 0 Comments

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா, தமிழ் திரையுலகில் தனக்கென்று தனித்த இடம் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர். கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த ‘மனசுக்கேத்த மகாராசா’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான தேவா பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 90களில் இளையராஜா ஒருபுறம், ஏ.ஆர் […]

தாய், மகள் உட்பட ஐந்து பெண்கள் நீரில் மூழ்கி பலியான சோக சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்தி

நீரில் மூழ்கி 5 பெண்கள் பலி: ஆந்திராவில் சோகம்

  • October 17, 2026
  • 0 Comments

தாய், மகள் உட்பட ஐந்து பெண்கள் நீரில் மூழ்கி பலியான சோக சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் துர்காபேட்டையைச் சேர்ந்தவர் காயத்ரி (50). இவரது மகள் அஸ்வினிக்கு சமீபத்தில் திருமணமாகி, பெங்களூருவில் கணவருடன் வசித்து வந்தார். தசரா விடுமுறையைக் கழிப்பதற்காக அஸ்வினி தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை காயத்ரி, அவரது மகள் அஸ்வினி மற்றும் காயத்ரியின் நெருங்கிய தோழிகள் […]

இலங்கைக்கு கடத்துவதற்காக  ரூ. 135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் (ஐஸ் போதைப்பொருள்) பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்த தவெக நிர்வாகி உட்பட 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.  இந்தியா செய்தி தமிழ்நாடு

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்: தவெக பிரமுகர் உட்பட நால்வர் கைது

  • October 17, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடத்துவதற்காக  ரூ. 135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் (ஐஸ் போதைப்பொருள்) பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்த தவெக நிர்வாகி உட்பட 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர். நாகையில் இருந்து இலங்கைக்கு   மெத்தம்பெட்டமைன் கடத்தப்படுவதாக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் புலனாய்வு இயக்குநரக (திருச்சி மண்டலம்) பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேற்று காலை 6 மணியளவில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி […]

11 மாணவர்கள் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தினார். இலங்கை செய்தி

11 மாணவர்கள் கடத்திக் கொலை: தொடர்புடையோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்

  • October 17, 2026
  • 0 Comments

11 மாணவர்கள் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தினார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “11 மாணவர்கள் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கரன்னாகொட (முன்னாள் கடற்படைத் தளபதி) சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இது பாரதூரமான குற்றமாகும். தான் திருகோணமலை முகாமுக்கு பொறுப்பாக இருந்தபோது இவர்கள் […]

“ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்வரை நாம் ஓயமாட்டோம். விகாரமஹாதேவி பூங்காவில் இருப்போம். அங்கிருந்து விரட்டினால் வேறு இடத்துக்கு செல்வோம்.” என்று பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்தார். இலங்கை செய்தி

ஞானசார தேரரை விடுவிக்கும்வரை கொழும்பில் இருந்து நகரமாட்டோம்

  • October 17, 2026
  • 0 Comments

“ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்வரை நாம் ஓயமாட்டோம். விகாரமஹாதேவி பூங்காவில் இருப்போம். அங்கிருந்து விரட்டினால் வேறு இடத்துக்கு செல்வோம்.” என்று பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்தார். எமது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை கொழும்பில் எல்லா இடங்களிலும் இருப்போம் எனவும் அவர் கூறினார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தியும், அவரின் துறவற ஆடை அகற்றப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்குகளால் கடந்த 10 ஆம் திகதி கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட […]

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் ஒத்திவைப்பு

  • October 17, 2026
  • 0 Comments

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது கையளிக்கப்பட்டவேளை, அடுத்த அமர்விலேயே விவாதத்துக்கு தயார் என ஆளுங்கட்சி அறிவித்திருந்தது. எனினும், எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் கூடுகின்றது. மேற்படி திகதிகளில் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது விவாதம் நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ள சில குளறுபடிகள் காரணமாகவே அதன்மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது என […]