இலங்கை செய்தி

11 மாணவர்கள் கடத்திக் கொலை: தொடர்புடையோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்

11 மாணவர்கள் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.

11 மாணவர்கள் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

“11 மாணவர்கள் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கரன்னாகொட (முன்னாள் கடற்படைத் தளபதி) சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இது பாரதூரமான குற்றமாகும்.

தான் திருகோணமலை முகாமுக்கு பொறுப்பாக இருந்தபோது இவர்கள் (மாணவர்கள்) அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனச் சின்னையா (முன்னாள் கடற்படைத் தளபதி) குறிப்பிட்டிருந்தார். இதனால்தான் சின்னையாவை ஒரு மாத காலப்பகுதிக்குள்ளேயே மைத்திரிபால சிறிசேன பதவி நீக்கம் செய்தார்” என்றார் பொன்சேகா.

அதேவேளை, “நான் இராணுவத்தில் இருந்தபோது புலிகள் அமைப்பிடமிருந்து 220 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. ஆனால் 110 கிலோ என்றே பின்னர் பஸில் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார். நான் சென்ற பிறகும் தங்கம் கிடைத்துள்ளது. அப்படியானால் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கத்தில் ஒரு பகுதி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது” என்ற தகவலையும் பொன்சேகா வெளியிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை