நீரில் மூழ்கி 5 பெண்கள் பலி: ஆந்திராவில் சோகம்
தாய், மகள் உட்பட ஐந்து பெண்கள் நீரில் மூழ்கி பலியான சோக சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் துர்காபேட்டையைச் சேர்ந்தவர் காயத்ரி (50). இவரது மகள் அஸ்வினிக்கு சமீபத்தில் திருமணமாகி, பெங்களூருவில் கணவருடன் வசித்து வந்தார்.
தசரா விடுமுறையைக் கழிப்பதற்காக அஸ்வினி தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை காயத்ரி, அவரது மகள் அஸ்வினி மற்றும் காயத்ரியின் நெருங்கிய தோழிகள் உட்பட 5 பேர் கொல்லப்பல்லி அணை பகுதிக்குச் சென்றனர்.
அங்கு அனைவரும் அணையில் இறங்கி குளித்தபோது, நீரின் ஆழம் அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர், தீவிர தேடுதலுக்குப் பிறகு 5 பேரையும் சடலமாக மீட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெருஞ் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




