இந்தியா செய்தி

புத்துயிர் பெறும் ராஜதந்திர உறவு: பிரதமர் மோடி கனடா பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி கனடா செல்கின்றார். கனடாவிலுள்ள இந்திய தூதரகம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி கனடா செல்கின்றார். கனடாவிலுள்ள இந்திய தூதரகம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியும், கனடா பிரதமர் மார்க் கார்னியும் அண்மையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள நேர்மறையான உத்வேகத்தைத் தொடர இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

மேலும் வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் மக்கள் இடையேயான உறவுகள் ஆகியவற்றில் உறுதியான பலன்களை அடைய பாடுபடுவது என்றும் ஒப்புக் கொண்டனர் என தெரியவருகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதமர் மோடி, கனடா செல்கின்றார்.

இந்த இரு நாள் பயணத்தின்போது, பிரதமர் மோடி ஒட்டாவா மற்றும் டொராண்டோ ஆகிய நகரங்களுக்குச் செல்வார் என்றும் அங்கு அவர் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்தபோது, கனடா, இந்தியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. மார்க் கார்னி பிரதமரான பிறகு இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி