அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் ஒத்திவைப்பு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது கையளிக்கப்பட்டவேளை, அடுத்த அமர்விலேயே விவாதத்துக்கு தயார் என ஆளுங்கட்சி அறிவித்திருந்தது.

எனினும், எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் கூடுகின்றது. மேற்படி திகதிகளில் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது விவாதம் நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ள சில குளறுபடிகள் காரணமாகவே அதன்மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

சபாநாயகருக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை