செய்தி பொழுதுபோக்கு

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். 

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா, தமிழ் திரையுலகில் தனக்கென்று தனித்த இடம் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர்.

கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த ‘மனசுக்கேத்த மகாராசா’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான தேவா பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

கடந்த 90களில் இளையராஜா ஒருபுறம், ஏ.ஆர் ரஹ்மான் மறுபுறம் ஆதிக்கம் செலுத்தி வந்த காலகட்டத்தில் தேவாவின் பாடல்களுக்குத் தனித்த ரசிகர் பட்டாளம் இருந்தது.

கானா பாடல்களை திரையுலகில் மைய நீரோட்டப்படுத்தியதில் தேவா முக்கியமானவராக அறியப்படுகிறார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி