உலகம்

எத்தியோப்பியாவில் பொதுமக்கள் தங்கியிருந்த முகாம் மீது ட்ரோன் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு

  • October 30, 2026
  • 0 Comments

எத்தியோப்பியாவின் அம்ஹாரா (Amhara) பிராந்தியத்தில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும்  பொதுமக்களுக்கான முகாம் ஒன்றின் மீது தொடர் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முகாம் ஏன் குறிவைக்கப்பட்டது அல்லது இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இருப்பினும், கடந்த மாதம் வடக்கு டைக்ரே Tigray  பிராந்தியத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் கூட்டணிக்கும் அடிஸ் அபாபாவில் Addis Ababa உள்ள […]

ஐரோப்பா

ரஷ்யா குறித்த ஆக்ரோஷமான அறிக்கைகள் பாதுகாப்பை சீர்குலைக்கும் – அமெரிக்கா எச்சரிக்கை

  • October 30, 2026
  • 0 Comments

ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த தங்களது பகிரங்கப் பேச்சுகளை மென்மையாக்குமாறு, லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா உள்ளிட்ட பல நேட்டோ நட்பு நாடுகளை பென்டகன் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பியத் தலைவர்களின் ஆக்ரோஷமான அறிக்கைகள் கண்டத்தின் பாதுகாப்பைக் குலைத்து, பதட்டங்களை அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உக்ரைனில் போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.  

ஐரோப்பா

ஹோர்முஸ் நீரிணையில் 03 கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததாக அறிவிப்பு

  • October 30, 2026
  • 0 Comments

ஹோர்மூஸ் நீரிணையில் அங்கீகரிக்கப்படாத பாதையை பயன்படுத்தி பயணிக்க முயன்ற மூன்று எண்ணெய் கப்பல்கள்  வெடி விபத்துக்கு உள்ளாகி தீப்பிடித்து எரிந்ததாக  அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படை இன்று இதனை அறிவித்துள்ளது. 2 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயைச் ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல்களில் ஒன்று, கண்ணிவெடி ஒன்றின் மீது மோதியே இந்த விபத்து நேர்ந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் அமெரிக்காவிற்குச் சொந்தமான ஆளில்லா கப்பல் ஒன்றை தாங்கள் அழித்ததாகவும் […]

உலகம்

பைனான்ஸில் ஹேக்கர்கள் கைவரிசை – 6.3 பில்லியன் டொலர்கள் திருட்டு

  • October 30, 2026
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைனான்ஸிலிருந்து ஹேக்கர்கள் 6.3 பில்லியன் டொலர்களை திருடியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் திருட்டுக்கு வட கொரியாவே காரணம் என்று ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் செய்தியைத் தொடர்ந்து கிரிப்டோகரன்சி விலைகள் சரிந்துள்ளன. “இது ஒரு சிக்கலான தாக்குதல். இதைத் தீர்ப்பதற்காக சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்,” என்று பைனான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் நிதி பாதுகாப்பாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட சில […]

ஐரோப்பா

UKவின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு அயர்லாந்தில் இணைவது தொடர்பில் ஆய்வு – அயர்லாந்து பிரதமர் தகவல்

  • October 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு அயர்லாந்துடன் ஒன்றிணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யவும், அதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ளவும் ஒரு அரசு அமைப்பை உருவாக்கவுள்ளதாக அயர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்நாட்டின் பிரதமர் மைக்கேல் மார்ட்டின் Micheal Martin  இன்று இதனை அறிவித்தார். இந்த புதிய அமைப்பு, வடக்கு அயர்லாந்து தொடர்ந்து பிரித்தானியாவின் ஒரு பகுதியாக நீடிப்பதா  அல்லது ஐக்கிய அயர்லாந்தின் ஒரு அங்கமாகத் தன்னாட்சி உரிமையுடன் இருப்பதா போன்ற பல்வேறு சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யும் என்றும், அவர் […]

உலகம்

இராணுவ தளங்களை பராமரிக்க புதிய பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தது அமெரிக்கா

  • October 30, 2026
  • 0 Comments

கடுமையான போரின் காரணமாக மின்சார விநியோகம், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் தடைபட்டாலும், தனது இராணுவத் தளங்களைப் பராமரிக்கும் ஒரு புதிய பாதுகாப்புத் திட்டத்தை அமெரிக்கா தயாரித்து வருகிறது. அதற்கு ‘கோட்டை’ (Fortress) என்று பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் எரிசக்தி, நிறுவல்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான உதவிச் செயலாளர் டேல் மார்க்ஸின் கூற்றுப்படி, இந்தத் திட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட 200 முக்கிய அமெரிக்க இராணுவத் தளங்கள், 30 நாட்கள் […]

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், ஆடவர் சர்வதேச T 20 கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். செய்தி விளையாட்டு

T-20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கடந்த முதல் வீரர்

  • October 30, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், ஆடவர் சர்வதேச T 20 கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். ஷார்ஜாவில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது T 20 போட்டியில், சிம்பாப்வே வீரர் தடிய்வனாஷே மருமணியை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் ரஷீத் கான் இந்த மைல்கல்லை எட்டினார். தனது 120ஆவது சர்வதேச T 20 போட்டியில் இந்தச் சாதனையைப் படைத்துள்ள 28 வயதான […]

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஆண்ட்ரூ பற்றிக்கை, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ரெலோவின் உப தலைவரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் சந்தத்துப் பேச்சு நடத்தினர். இலங்கை செய்தி

புதிய சட்டமூலங்களால் தமிழருக்கு பேராபத்து

  • October 30, 2026
  • 0 Comments

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஆண்ட்ரூ பற்றிக்கை, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ரெலோவின் உப தலைவரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் சந்தத்துப் பேச்சு நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் சட்டமூலம்’ ஆகியவற்றால் சிறுபான்மைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளவுள்ள ஆபத்துகள் […]

எதிர்க்கட்சியினரால் சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கை செய்தி

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை: விவாதத்துக்கு எடுக்கப்படமாட்டாது

  • October 30, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சியினரால் சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி விவாதத்துக்கு  எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாகத் திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டிய குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நிர்ணயிக்கப்பட்ட ஒக்டோபர் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவித்த சபை முதல்வர், எதிர்க்கட்சிகளால் […]

தன்னைப் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பான பேச்சை தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகளும் கட்சியினருமே கிளப்பிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

பொதுவேட்பாளரா? சீமான் கூறுவது என்ன?

  • October 30, 2026
  • 0 Comments

தன்னைப் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பான பேச்சை தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகளும் கட்சியினருமே கிளப்பிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவரின் 119ஆவது ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தன்னைப் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக திமுக, அதிமுக அல்லது நாம் தமிழர் கட்சி எவ்வித முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவித்த […]