இந்திய கடற்படையை விரிவுப்​படுத்த ரூ.40,000 கோடி​யில் 8 அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்​கும் திட்​டத்​துக்​காக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்​புதல் அளித்​துள்​ளது. இந்தியா செய்தி

இந்திய கடற்படையை விரிவுபடுத் 8 அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்க திட்டம்

  • October 31, 2026
  • 0 Comments

இந்திய கடற்படையை விரிவுப்​படுத்த ரூ.40,000 கோடி​யில் 8 அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்​கும் திட்​டத்​துக்​காக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்​புதல் அளித்​துள்​ளது. பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான பாது​காப்​புக்​கான அமைச்​சரவைக் குழு (சிசிஎஸ்), இந்​திய கடற்​படைக்​காக 8 அதிநவீன போர்க்​கப்​பல்​களைக் கட்​டுவதற்கு ரூ.40,000 கோடி மதிப்​பிலான பாது​காப்பு திட்​டத்​துக்கு ஒப்​புதல் அளித்​துள்​ளது. இந்​திய கடற்​படையை விரிவுப்​படுத்​தும் நோக்​கில் செயல்​படுத்​தப்​படும் இத்​திட்​டத்தை, கொல்​கத்​தாவைத் தளமாகக் கொண்ட ‘கார்​டன் ரீச் ஷிப் பில்​டர்ஸ் அன்ட் இன்​ஜி​னியர்ஸ்’ (ஜிஆர்​எஸ்இ) மற்​றும் கோவாவில் உள்ள […]

இலங்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 6.8 வீதத்தால் வீழ்ச்சி

  • October 31, 2026
  • 0 Comments

2026-ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் இலங்கை ரூபாய், அமெரிக்க டொலருக்கு எதிராக 6.8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி  (CBSL)  வெளியிட்ட தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 2025-ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 309.99 ரூபாயாக இருந்த நிலையில், 2026 அக்டோபர் மாத இறுதியில் அது 332.61 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் பொருள், இந்த பத்து மாத காலத்தில் ஒரு அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் […]

இறுதிச் சடங்கு நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு, நேற்றிரவு (30) டு திரும்பிக்கொண்டிருந்த நபரொருவர், கெசெல்கமு ஓயாவுக்குச் செல்லும் நீரோடை கால்வாயிலிருந்து இன்று (31) சடலம் மீட்கப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை செய்தி

இறுதிச்சடங்கில் பங்கேற்று வீடு திரும்பிய குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

  • October 31, 2026
  • 0 Comments

இறுதிச் சடங்கு நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு, நேற்றிரவு (30) டு திரும்பிக்கொண்டிருந்த நபரொருவர், கெசெல்கமு ஓயாவுக்குச் செல்லும் நீரோடை கால்வாயிலிருந்து இன்று (31) சடலம் மீட்கப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பொகவந்தலாவை செப்பல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான நாகராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (30) இரவு, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோரா தோட்டத்தில் இடம்பெற்ற உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட பின்னர், நடந்தே […]

இந்தோனேசியாவில் பல மாதங்களாக நீடித்து வரும் காட்டுத்தீயினால் ஏற்பட்ட புகை மாசு காரணமாக, கடந்த செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் சுமார் 3,560 பேர் உயிரிழந்துள்ளதாக புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவை உலுக்கிய காட்டுத் தீ: ஒரே மாதத்தில் 3,560 பேர் பலி

  • October 31, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் பல மாதங்களாக நீடித்து வரும் காட்டுத்தீயினால் ஏற்பட்ட புகை மாசு காரணமாக, கடந்த செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் சுமார் 3,560 பேர் உயிரிழந்துள்ளதாக புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்சின்கியைத் தளமாகக் கொண்ட தூய காற்று மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி மையம் (CREA) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. காட்டுத்தீயினால் வெளியேறிய புகை காரணமாக ஏற்பட்ட காற்று மாசுபாட்டினால், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், செப்டெம்பர் மாத உயிரிழப்பு […]

2.1 பில்லியன் டொலர் பெறுமதியில் 500 பேட்ரியட் ஏவுகணைகள்: அமெரிக்கா அனுமதி ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைனுக்கு 500 ஏவுகணைகள்: அமெரிக்கா அனுமதி

  • October 31, 2026
  • 0 Comments

உக்ரைனுக்கு 500 பேட்ரியட் (Patriot PAC-3) ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. இந்த விற்பனையின் மதிப்பு சுமார் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (30) இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான இரண்டாவது நிர்வாகம் பதவியேற்ற பின்னர், உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை வழங்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற […]

இலங்கையில் ஒக்ரோபர் மாதத்தில் பணவீக்கம் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு

  • October 31, 2026
  • 0 Comments

இலங்கையில் ஒக்ரோபர் மாதத்தில் பணவீக்கம் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. செப்ரெம்பர் மாதத்தில் பணவீக்கம், 8.0 சதவீதமாக இருந்த நிலையில், ஒக்ரோபரில், 0.3 வீதத்தினால் அதிகரித்துள்ளது. ஒக்ரோபர் மாத உணவுப் பணவீக்கம் 8.8 சதவீதமாகவும், உணவு அல்லாத பணவீக்கம் 8.0 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக, சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் நிலவும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, அதற்குரிய அறிக்கையை விரைவில் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்குமாறு மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார். இலங்கை செய்தி

மாகாணத் தேர்தல் சட்டச் சிக்கல்: விரைந்து தீர்வு காண வேண்டும்

  • October 31, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் நிலவும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, அதற்குரிய அறிக்கையை விரைவில் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்குமாறு மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் அவகாசம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை மற்றும் தேர்தல் நடத்தப்படுவதில் […]

மஹிந்த ராஜபக்ச வயோதிப நிலையை அடைந்துவிட்டார் என்பது உண்மை. ஆனால், அவர் இந்த நாட்டுக்காக ஆற்றிய சேவைகள் வயோதிபம் அடையவில்லை. அவர் நாட்டுக்காகப் பெரும் சேவையாற்றியுள்ளார். இதனை எமது நாட்டு மக்கள் விரைவில் உணர்ந்துகொள்வார்கள். இலங்கை செய்தி

“மஹிந்த கிழட்டு மைனா” – கடுப்பில் மொட்டு கட்சி

  • October 31, 2026
  • 0 Comments

மஹிந்த ராஜபக்ச வயோதிப நிலையை அடைந்துவிட்டார் என்பது உண்மை. ஆனால், அவர் இந்த நாட்டுக்காக ஆற்றிய சேவைகள் வயோதிபம் அடையவில்லை. அவர் நாட்டுக்காகப் பெரும் சேவையாற்றியுள்ளார். இதனை எமது நாட்டு மக்கள் விரைவில் உணர்ந்துகொள்வார்கள். வியட்நாமுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த தலைவரை அந்நாட்டு மக்கள் இன்றளவும் பெரிதும் மதிக்கின்றனர். அவரது உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு, அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த சில இளைஞர்கள் மஹிந்த ராஜபக்சவை ‘கிழட்டு மைனா’ என விமர்சித்தனர். […]

இந்தியா

உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விபத்து – அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

  • October 30, 2026
  • 0 Comments

இந்தியாவின் இமயமலை மாநிலமான உத்தரகண்டில் ஹெலிகாப்டர் ஒன்று இன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பத்ரிநாத்திலிருந்து டேராடூன் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த ஹெலிகாப்டரில் ஐந்து பயணிகள் மற்றும் ஒரு விமானி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோஷிமத் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகத் தகவல் கிடைத்துள்ளதாக உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் […]

உலகம்

சுவிட்சர்லாந்து – வடகொரியா வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

  • October 30, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் இக்னாசியோ காசிஸ் Ignazio Cassis, வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சோ சன் ஹுயியைப் Choe Son Hui  பியோங்யாங்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தின் தூதரக அலுவலகத்தை மீண்டும் அதிகாரப்பூர்வமாகத் திறப்பதற்காக பியோங்யாங்கிற்கு சென்றிருந்த அவர் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகளை முறைப்படுத்துவது மற்றும் அரசியல் உரையாடல்களை மீண்டும் தொடங்குவது குறித்து இருநாட்டு தலைவர்களும் இதன்போது விவாதித்துள்ளனர். கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு மற்றும் யூரேசிய பிராந்தியத்தில் உள்ள […]