ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைனுக்கு 500 ஏவுகணைகள்: அமெரிக்கா அனுமதி

2.1 பில்லியன் டொலர் பெறுமதியில் 500 பேட்ரியட் ஏவுகணைகள்: அமெரிக்கா அனுமதி

உக்ரைனுக்கு 500 பேட்ரியட் (Patriot PAC-3) ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. இந்த விற்பனையின் மதிப்பு சுமார் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (30) இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான இரண்டாவது நிர்வாகம் பதவியேற்ற பின்னர், உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை வழங்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், அவற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான ஏவுகணை இடைமறிப்பு அமைப்புகளை அதிகளவில் வழங்குமாறு உக்ரைன் நீண்டகாலமாக அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.

எனினும், இந்த ஏவுகணைகள் உடனடியாக உக்ரைனுக்குக் கிடைக்கப்போவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அவை இன்னும் உற்பத்தி செய்யப்பட வேண்டியுள்ளதால், 2030ஆம் ஆண்டின் முற்பகுதிக்குப் பின்னரே விநியோகம் இடம்பெறுமென அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் அறிந்த இரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

விநியோகத்தை விரைவுபடுத்தும் நோக்கில், அமெரிக்காவின் கையிருப்பிலுள்ள ஏவுகணைகளை முதற்கட்டமாக வழங்கிவிட்டு, பின்னர் புதிதாக உற்பத்தி செய்யப்படும் ஏவுகணைகளைக் கொண்டு அந்தக் கையிருப்பை மீள நிரப்பும் சாத்தியக்கூறுகளையும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொள்வனவுக்கான நிதியை கனடா, ஜேர்மனி மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் பங்களிப்புகளுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் ஆதரவுக் கடன் திட்டத்தின் கீழான நிதியுதவியையும் பயன்படுத்தி வழங்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி