இலங்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 6.8 வீதத்தால் வீழ்ச்சி

2026-ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் இலங்கை ரூபாய், அமெரிக்க டொலருக்கு எதிராக 6.8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி  (CBSL)  வெளியிட்ட தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி 2025-ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 309.99 ரூபாயாக இருந்த நிலையில், 2026 அக்டோபர் மாத இறுதியில் அது 332.61 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதன் பொருள், இந்த பத்து மாத காலத்தில் ஒரு அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு 22.62 ரூபாயால் அதிகரித்துள்ளது என்பதாகும்.

மேலும், 2024-ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 292.58 ரூபாயாக இருந்ததாக மத்திய வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இது கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதைக் குறிக்கிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்