இந்தியா செய்தி

இந்திய கடற்படையை விரிவுபடுத் 8 அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்க திட்டம்

இந்திய கடற்படையை விரிவுப்​படுத்த ரூ.40,000 கோடி​யில் 8 அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்​கும் திட்​டத்​துக்​காக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இந்திய கடற்படையை விரிவுப்​படுத்த ரூ.40,000 கோடி​யில் 8 அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்​கும் திட்​டத்​துக்​காக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்​புதல் அளித்​துள்​ளது.

பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான பாது​காப்​புக்​கான அமைச்​சரவைக் குழு (சிசிஎஸ்), இந்​திய கடற்​படைக்​காக 8 அதிநவீன போர்க்​கப்​பல்​களைக் கட்​டுவதற்கு ரூ.40,000 கோடி மதிப்​பிலான பாது​காப்பு திட்​டத்​துக்கு ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இந்​திய கடற்​படையை விரிவுப்​படுத்​தும் நோக்​கில் செயல்​படுத்​தப்​படும் இத்​திட்​டத்தை, கொல்​கத்​தாவைத் தளமாகக் கொண்ட ‘கார்​டன் ரீச் ஷிப் பில்​டர்ஸ் அன்ட் இன்​ஜி​னியர்ஸ்’ (ஜிஆர்​எஸ்இ) மற்​றும் கோவாவில் உள்ள ‘கோவா ஷிப்​யார்ட் லிமிடெட்’ (ஜிஎஸ்எல்) ஆகிய இரண்டு முக்​கிய பொதுத்​துறை கப்​பல் கட்​டும் நிறு​வனங்​கள் மேற்​கொள்​ளும் என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக இவ்​விரு நிறு​வனங்​களு​டன் அரசு விரைவில் ஒப்பந்தம் மேற்​கொள்​ளும் என தகவல்​கள் தெரி​விக்​கின்​றன.

புதி​ய​தாக தயாரிக்கப்படும் 8 போர்க்​கப்​பல்​களும் அதிவேக மேற்​பரப்​புப் போர்க்​கப்​பல்​களாக இருக்​கும். இவற்​றின் வேகம் சுமார் 30 நாட்ஸ் ஆக இருக்​கும். முதல் போர்க்​கப்​பல் 2030-க்​குள் ஒப்​படைக்க இலக்கு நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் கட்​டு​மான கால அட்​ட​வணையை விரைவுபடுத்த முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்​றன.

8 கப்​பல்​களும் இந்​தி​யாவிலேயே கட்​டப்​படுவது, உள்​நாட்டு கப்பல் கட்​டும் திறன்​களை ஆதரிப்​ப​தோடு, நாட்​டின் உள்​நாட்டு பாதுகாப்பு உற்​பத்தி சூழலமைப்​பையும் வலுப்​படுத்​தும் என எதிர்பார்க்​கப்​படு​கிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி