“மஹிந்த கிழட்டு மைனா” – கடுப்பில் மொட்டு கட்சி
மஹிந்த ராஜபக்ச வயோதிப நிலையை அடைந்துவிட்டார் என்பது உண்மை. ஆனால், அவர் இந்த நாட்டுக்காக ஆற்றிய சேவைகள் வயோதிபம் அடையவில்லை. அவர் நாட்டுக்காகப் பெரும் சேவையாற்றியுள்ளார். இதனை எமது நாட்டு மக்கள் விரைவில் உணர்ந்துகொள்வார்கள்.
வியட்நாமுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த தலைவரை அந்நாட்டு மக்கள் இன்றளவும் பெரிதும் மதிக்கின்றனர். அவரது உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு, அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த சில இளைஞர்கள் மஹிந்த ராஜபக்சவை ‘கிழட்டு மைனா’ என விமர்சித்தனர். அவ்வாறு விமர்சித்தவர்கள் தாம் தவறிழைத்துவிட்டதை இன்று உணர்ந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் எம்முடன் பேசுகின்றனர்.
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“வியட்நாமுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த தலைவருக்கு அந்நாட்டு மக்கள் இன்றளவும் மரியாதை செலுத்துகின்றனர். அவரது உடல் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இங்கு அரகலய போராட்டத்தின்போது மஹிந்த ராஜபக்சவை 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த சில இளைஞர்கள் ‘கிழட்டு மைனா’ என விமர்சித்தனர். எனினும், தாம் செய்தது தவறு என்பதை உணர்ந்துள்ள அவர்கள் இன்று எம்முடன் பேசுகின்றனர்” என்றார்.




