சீனாவின் கடல்சார் செயற்பாடுகள் அதிகரிப்பு – பாதுகாப்பு அச்சத்தில் 03 நாடுகள்
தைவான், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று ஒரு ஜப்பானிய நிபுணரை மேற்கோள் காட்டி தைவானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தைவானின் கிழக்குக் கடற்பரப்பில் தனது கடற்படை இருப்பை விரிவுபடுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பெய்ஜிங் ஆட்சியின் உண்மையான நோக்கங்களைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கு இந்த மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தைவானுக்கும் ஜப்பானுக்கும் இடையே தற்போது மெதுவான ஒத்துழைப்பு நிலவுகிறது.
இருப்பினும், ஜப்பானியப் பிரதமர் சனே டகாயிச்சியின் அரசாங்கத்தின் கீழ் கடல்சார் பாதுகாப்புப் பிரச்சினைகள் மீதான கவனம் ஓரளவு குறைந்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




