உலகம்

சீனாவில் 07 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

சீனாவில் உள்ள திபெத்தியப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவானதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி வடக்கு திபெத்தில் உள்ள நகு பகுதியில், தரைக்குக் கீழே சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2024-க்குப் பிறகு சீனாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். மேலும், அப்பகுதியில் உள்ள மக்கள் நில அதிர்வுகளைத் தெளிவாக உணர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது சொத்து சேதங்கள் குறித்த குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்