ஐரோப்பா

பெல்கோரோட் பகுதியில் ரஷ்யா தாக்குதல் -03 பேர் பலி

  • October 25, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் மேலும் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 30 அடுக்குமாடிக் கட்டிடங்களும், 35 கார்களும் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன், ரஷ்யா மீது 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்றும், இதில் பெல்கோரோட் நகரமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பிரித்தானியாவை தாக்கிய ப்ளூ’ புயல் – பல பகுதிகளில் மின் தடை

  • October 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின்  பல பகுதிகளில் ப்ளூ’ புயல், கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி புயல் காரணமாக கனமழை மற்றும் மணிக்கு 85 மைல்கள்  வேகத்தில் பலத்த காற்று வீசியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்துக்கும், வடக்கு அயர்லாந்திற்கும் இன்று (25) எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த வாரம் பிரித்தானியாவை தாக்கிய இரண்டாவது பெயரிடப்பட்ட புயல் இதுவாகும். மோசமான வானிலை காரணமாக சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதுடன், அதனை மீட்டெடுக்கும் பணிகள் இடம்பெறுவதாகவும் […]

இலங்கை

40 ஈரானிய மாலுமிகள் மருத்துவ சிகிச்சைக்குப் பின் நாட்டை விட்டு வெளியேறினர்

  • October 25, 2026
  • 0 Comments

இலங்கைக் கடற்கரையிலிருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் வர்த்தகக் கப்பல்களில் தவித்த சுமார் 40 ஈரானிய மாலுமிகள் காலி துறைமுகம் வழியாக நாட்டிற்குள் அழைத்து வரப்பட்டதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களின் உடல்நிலை குறித்து அவர்களிடமிருந்து பெறப்பட்ட அவசர உதவிக் கோரிக்கைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட ஒரு மனிதாபிமான நடவடிக்கை இது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கொழும்பில் உள்ள ஈரானிய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு எளிதாக்கப்பட்டது. கரைக்கு வந்தடைந்த பின்னர் தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற்ற […]

இலங்கை

ரயிலுடன் பேருந்து மோதி கோர விபத்து – மூவரின் நிலை கவலைக்கிடம்

  • October 25, 2026
  • 0 Comments

ஹபராதுவ பகுதியில் ரயில் கிராசிங்கில் பேருந்து ஒன்று ரயில் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதில் 06 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை

பிரான்ஸ், இத்தாலியை தொடர்ந்து அல்பேனியாவிலும் வெடித்தது மாணர்களின் போராட்டம்

  • October 25, 2026
  • 0 Comments

பிரான்ஸ் , இத்தாலி உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது அல்பேனியாவிலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. அரசாங்க ஊழல், வேலையின்மை மற்றும் கல்வித் தரக் குறைபாடு ஆகியவற்றை வலியுறுத்தியே மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தலைநகர் டிரானாவில் ஆரம்பித்த போராட்டம் தற்போது ஏனைய பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது. நேற்றைய போராட்டத்தில், போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசியும், வேளாண் அமைச்சகத்தின் கதவில் தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களைக் கலைக்க, கலவரத் தடுப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள், […]

உலகளாவிய நெருக்கடிகளைத் தீர்ப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தலைமைத்துவத்துடன் செயல்பட வேண்டுமே தவிர, வெறும் பார்வையாளராக இருக்கக்கூடாது என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா செய்தி

உலகளாவிய நெருக்கடிகளில் ஐ.நா. பார்வையாளராக இருக்கக்கூடாது: இந்தியா வலியுறுத்து

  • October 25, 2026
  • 0 Comments

உலகளாவிய நெருக்கடிகளைத் தீர்ப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தலைமைத்துவத்துடன் செயல்பட வேண்டுமே தவிர, வெறும் பார்வையாளராக இருக்கக்கூடாது என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஐ.நா.வின் கட்டமைப்பில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், உக்ரைன் மற்றும் மேற்காசியாவில் தொடரும் போர்களால், அந்த மோதல்களுடன் நேரடித் தொடர்பில்லாத நாடுகளும் மக்களும் பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்வதாகக் […]

பலாலி மக்களின் பூர்வீக வாழிடங்களையும் விவசாயக் காணிகளையும் முழுமையாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் கவனவீர்ப்புப் போராட்டம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இன்று ஞாயிற்றுக்கிழமை 19 ஆவது வாரமாகவும் பலாலிச் சந்தியில் தொடர்ச்சியாக நடைபெற்றது. இலங்கை செய்தி

கொட்டும் மழையிலும் 19ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் போராட்டம்

  • October 25, 2026
  • 0 Comments

பலாலி மக்களின் பூர்வீக வாழிடங்களையும் விவசாயக் காணிகளையும் முழுமையாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் கவனவீர்ப்புப் போராட்டம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இன்று ஞாயிற்றுக்கிழமை 19 ஆவது வாரமாகவும் பலாலிச் சந்தியில் தொடர்ச்சியாக நடைபெற்றது. தமது சொந்த நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து 36 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இன்னமும் தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலை தொடர்வதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மிகுந்த கவலை வெளியிட்டுள்ளனர். காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாத காரணத்தால், தமது […]

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அவரது உருவச்சிலை வைக்கப்பட்டமை தொடர்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனிடம் பொலிஸார் சுமார் மூன்று மணி நேர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். செய்தி

திலீபனுக்கு சிலை: கஜேந்திரனிடம் 3 மணி நேரம் தீவிர விசாரணை

  • October 25, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அவரது உருவச்சிலை வைக்கப்பட்டமை தொடர்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனிடம் பொலிஸார் சுமார் மூன்று மணி நேர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் கஜேந்திரன் எம்.பி. இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவரிடமிருந்து விரிவான வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன. பொலிஸ் விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த […]

உலகம்

நைஜீரியாவில் கொள்ளையர்கள் அட்டகாசம் – 40 பேர் படுகொலை

  • October 25, 2026
  • 0 Comments

நைஜீரியாவின் வடகிழக்கு தராபா மாநிலத்தில் உள்ள கிராமமொன்றின் மீது துப்பாக்கி ஏந்திய  மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 10 பேர் கொல்லப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியிருந்தாலும், நேற்று   மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது. டுமையான துப்பாக்கிச் சூட்டுடன் கிராமத்திற்குள் நுழைந்த தாக்குதல்தாரிகள் கடைகளில் இருந்த பொருட்களை கொள்ளையிட்டு  சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. வட நைஜீரியாவில், உள்ளூரில் […]

பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பாடசாலைகளின் மோசமான நிலைமைகளைக் கண்டித்து, சனிக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரான்ஸில் மீண்டும் வெடித்த போராட்டம்: 1,000 பேர் கைது

  • October 25, 2026
  • 0 Comments

பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பாடசாலைகளின் மோசமான நிலைமைகளைக் கண்டித்து, சனிக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நூறாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்ற போதிலும், பின்னர் பல நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. பாரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காகப் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் நீர்த்தாரைகளையும் பயன்படுத்தினர். மார்செய் நகரில் வீதித் தடுப்புகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், […]