பிரான்ஸ், இத்தாலியை தொடர்ந்து அல்பேனியாவிலும் வெடித்தது மாணர்களின் போராட்டம்
பிரான்ஸ் , இத்தாலி உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது அல்பேனியாவிலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
அரசாங்க ஊழல், வேலையின்மை மற்றும் கல்வித் தரக் குறைபாடு ஆகியவற்றை வலியுறுத்தியே மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தலைநகர் டிரானாவில் ஆரம்பித்த போராட்டம் தற்போது ஏனைய பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது.
நேற்றைய போராட்டத்தில், போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசியும், வேளாண் அமைச்சகத்தின் கதவில் தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களைக் கலைக்க, கலவரத் தடுப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள், நீர்ப் பீரங்கிகள் மற்றும் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் ஆதரவுடன் கடற்கரையோரத்தில் மேற்கொள்ளப்படவிருந்த ஆடம்பரத் திட்டத்திற்கு எதிராக, கோடைகாலத்தில் பெரும்பாலும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இந்த தற்போதைய கொந்தளிப்பு, 2013 முதல் ஆட்சியில் இருந்து, 2025-ல் நான்காவது முறையாகப் பதவியேற்ற பிரதமர் ராமாவுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.




