ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ , லஞ்ச , ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினரால் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கைது

  • September 4, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ , லஞ்ச , ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினரால் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று ஆஜரான நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு சுமார் 7.4 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ச கேட்போர் கூடத்திற்கு […]

சிட்னி விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் இரு Qantas விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் ஆபத்திலிருந்து மயிரிழையில் தப்பின. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

10 நாட்கள் ஓய்வில்லாப் பணி: ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிரோடு விளையாடுகிறதா விமானத்துறை?

  • September 4, 2026
  • 0 Comments

சிட்னி விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் இரு Qantas விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் ஆபத்திலிருந்து மயிரிழையில் தப்பின. இந்தச் சம்பவத்தின் போது பணியில் இருந்த பல விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டாளர்கள் (Air traffic controllers) கடுமையான உடல் மற்றும் மனச் சோர்வில் (Fatigue) இருந்தமை Reuters செய்தி நிறுவனத்திற்குக் கிடைத்துள்ள உள்கட்டமைப்புப் பதிவுகள் மற்றும் உரையாடல் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிலைமையை “சற்றுப் பைத்தியக்காரத்தனமானது” என அப்போதைய பணிப் பொறுப்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். […]

நேபாளத்தின் த்ரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பனி பாறை மற்றும் மண்சரிவில் சிக்கி 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேபாளம் பேரழிவு: 9 நாட்களுக்கு பிறகு இருவர் உயிருடன் மீட்பு

  • September 4, 2026
  • 0 Comments

நேபாளத்தின் த்ரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பனி பாறை மற்றும் மண்சரிவில் சிக்கி 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், பேரழிவு ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு, த்ரிசூலி ஆற்றின் நீர்மின் நிலையத்தோடு தொடர்புடைய சுரங்கப்பாதையிலிருந்து இருவர் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேல் த்ரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் (Upper Trishuli 3A Hydropower Station) சுரங்கப்பாதையிலிருந்து மீட்கப்பட்ட இருவரும் சஞ்சய் சா (இயந்திரவியல் மேலாளர்) மற்றும் கபீர் மகர்ஜன் (இயந்திரவியல் மேற்பார்வையாளர்) […]

உலகம்

ஃபாக்லாந்து தீவு மீதான தன் பிடியை இறுக்கும் அர்ஜென்டீனா

  • September 4, 2026
  • 0 Comments

ஃபாக்லாந்து தீவுகளைச் சுற்றி  எண்ணெய் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீதான தடைகளைக் கடுமையாக்குவதாக  அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலே Javier Milei தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் தென்பகுதியில் பாதுகாப்பு வளங்களை அதிகரிப்பதாகவும், இறையாண்மை மீறல்களுக்கு எதிராக  தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான ஆணையில் கையெழுத்திடுவதாகவும் மிலே அறிவித்துள்ளார். அர்ஜென்டினாவின் பிரதான நிலப்பரப்பிலிருந்து சுமார் 500 கி.மீ (300 மைல்கள்) கிழக்கே அமைந்துள்ள பிரிட்டனின் வெளிநாட்டுப் பிரதேசமான ஃபாக்லாண்ட்ஸ் தீவை அர்ஜென்டினா நீண்டகாலமாக […]

உலகம்

நேபாள பேரழிவு – 2.56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சேதம்

  • September 4, 2026
  • 0 Comments

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில், குறைந்தது 387.5 பில்லியன் நேபாள ரூபாய் (2.56 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சொத்துக்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார். அவர் இன்று ரொய்டர்ஸ் செய்திசேவைக்கு இன்று இந்த தகவலை வழங்கியுள்ளார். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக சாலைகள் மற்றும் தற்காலிக முகாம்களை அமைப்பதற்கும், குடிநீர் வழங்குவதற்கும், மின்சாரத்தை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக 52.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் […]

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. செய்தி

11 வயது சிறுவனின் உயிரை பறித்த நாவல் பழம்: மட்டக்களப்பில் சோகம்

  • September 4, 2026
  • 0 Comments

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்தவரும், 37 ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்று வந்தவருமான ரொ. சஞ்சீவ் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுவனின் வீட்டுக்கு முன்னால் நின்ற நாவற்பழ […]

அதிகாரப்பகிர்வு, நம்பகமான பொறுப்புக்கூறல் கட்டமைப்பு, சுதந்திரமான சிறப்பு சட்டவாளருடன் கூடிய சிறப்பு நீதிப் பொறிமுறை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் இணைய வேண்டும் என இலங்கையிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் சிறப்பு நீதிப்பொறிமுறையை வலியுறுத்தும் ஐ.நா அறிக்கை

  • September 4, 2026
  • 0 Comments

அதிகாரப்பகிர்வு, நம்பகமான பொறுப்புக்கூறல் கட்டமைப்பு, சுதந்திரமான சிறப்பு சட்டவாளருடன் கூடிய சிறப்பு நீதிப் பொறிமுறை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் இணைய வேண்டும் என இலங்கையிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63வது கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2025 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட 60/1 தீர்மானத்தின் அடிப்படையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் […]

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டை இறுதி செய்வதை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இலங்கை செய்தி

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்பாடு குறித்து ஆராய்வு

  • September 3, 2026
  • 0 Comments

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டை இறுதி செய்வதை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எரிசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர், அனுர கருணாதிலக தலைமையில், அவரது பணியகத்தில் இன்று காலை புரிந்துணர்வு உடன்பாடு குறித்த ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய பிரதி தூதுவர் மைத்ரே குல்கர்னி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றது. பிரதி அமைச்சர் ஜனித […]

உலகம்

இந்தோனேசியாவில் உணவு நஞ்சாதல் – 777 மாணவர்கள் பாதிப்பு

  • September 3, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில், அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளடங்களாக 777 பேருக்கு உணவு நஞ்சூட்டல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாடசாலையின் அதிபர் இன்று இந்த தகவலை வெளியிட்டார். இதன் மூலம், இந்தத் திட்டத்தால் நோய்வாய்ப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று நாட்களில் 1,700-ஐத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய உணவு நஞ்சூட்டல் காரணமாக 950 இந்தோனேசியர்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக, ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ Prabowo […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் குண்டுவீச்சு விமானப்பிரிவு தளபதி மீது துப்பாக்கிச்சூடு

  • September 3, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் நீண்ட தூர விமானப் பிரிவின் 22வது கனரக குண்டுவீச்சு விமானப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் நிகோலாய் வார்பகோவிச் Nikolai Varpakhovich மீது நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த அதிகாரி கடையொன்றில் இருந்து வெளியே வந்தபோது மிக அருகில் வந்த நபர் ஒருவரால் மூன்று முறை சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு குண்டு அவரது முகத்திலும், மற்றொன்று உடற்பகுதியிலும் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மொஸ்கோ உயர் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட சமீபத்திய […]