உலகம்

ஃபாக்லாந்து தீவு மீதான தன் பிடியை இறுக்கும் அர்ஜென்டீனா

ஃபாக்லாந்து தீவுகளைச் சுற்றி  எண்ணெய் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீதான தடைகளைக் கடுமையாக்குவதாக  அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலே Javier Milei தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் தென்பகுதியில் பாதுகாப்பு வளங்களை அதிகரிப்பதாகவும், இறையாண்மை மீறல்களுக்கு எதிராக  தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான ஆணையில் கையெழுத்திடுவதாகவும் மிலே அறிவித்துள்ளார்.

அர்ஜென்டினாவின் பிரதான நிலப்பரப்பிலிருந்து சுமார் 500 கி.மீ (300 மைல்கள்) கிழக்கே அமைந்துள்ள பிரிட்டனின் வெளிநாட்டுப் பிரதேசமான ஃபாக்லாண்ட்ஸ் தீவை அர்ஜென்டினா நீண்டகாலமாக உரிமைக் கோரி வருகிறது.

1833 முதல் பிரிட்டன் இந்தத் தீவுகளைக் கட்டுப்படுத்தி வருகிறது, மேலும் 1982-ல் இரு நாடுகளும் இதற்காக ஒரு குறுகிய போரில் ஈடுபட்டன.

இதனைத் தொடர்ந்து இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை எட்ட செயற்பட்டிருந்தாலும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்