நேபாள பேரழிவு – 2.56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சேதம்
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில், குறைந்தது 387.5 பில்லியன் நேபாள ரூபாய் (2.56 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சொத்துக்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று ரொய்டர்ஸ் செய்திசேவைக்கு இன்று இந்த தகவலை வழங்கியுள்ளார்.
மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக சாலைகள் மற்றும் தற்காலிக முகாம்களை அமைப்பதற்கும், குடிநீர் வழங்குவதற்கும், மின்சாரத்தை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக 52.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 20,000 வீடுகளை நேபாளம் மீண்டும் கட்ட வேண்டியிருக்கும் எனவும் அவற்றில் குறைந்தது 7,500 வீடுகள் முற்றிலும் அழிந்துவிட்டன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




