ரஷ்யாவின் குண்டுவீச்சு விமானப்பிரிவு தளபதி மீது துப்பாக்கிச்சூடு
ரஷ்யாவின் நீண்ட தூர விமானப் பிரிவின் 22வது கனரக குண்டுவீச்சு விமானப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் நிகோலாய் வார்பகோவிச் Nikolai Varpakhovich மீது நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரி கடையொன்றில் இருந்து வெளியே வந்தபோது மிக அருகில் வந்த நபர் ஒருவரால் மூன்று முறை சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு குண்டு அவரது முகத்திலும், மற்றொன்று உடற்பகுதியிலும் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மொஸ்கோ உயர் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலாக இது காணப்படுகிறது.




