சிறைச்சாலையைக்கூட நிர்வகிக்க முடியவில்லை: அரசுமீது எதிரணி விமர்சனக் கணை தொடுப்பு
“சிறைச்சாலைக் கட்டமைப்பைக் கூட முறையாக நிர்வகிக்க முடியாத தேசிய மக்கள் சக்தியினரால் இந்நாட்டை முறையாக ஆள முடியுமா? அவர்களால் நிச்சயமாக முடியாது. அதனால்தான் அவர்கள் ஏதேச்சாதிகார வழியில் பயணிக்க முற்படுகின்றனர்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாகச் சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது: “மஹர சிறைச்சாலையிலும் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலைகளைக் கூட இந்த ஆட்சியாளர்களால் முறையாக […]













