உலகம்

இந்தோனேசியாவில் நடு கடலில் தீப்பிடித்து எரிந்த படகு – ஐவர் வலி, பலர் மாயம்

  • August 2, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் மதுரா தீவுக்கு அருகே படகு ஒன்று தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.. இதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், 41 பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுரபயாவிலிருந்து (Surabaya)  தெற்கு சுலவேசியின் (Sulawesi)  மக்காசர்  (Makassar) நகருக்குச் சென்று கொண்டிருந்த படகே இன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. படகில் தீவிபத்து ஏற்பட்டமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை எனவும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீப்பிடித்தபோது அந்தப் படகில் 271 பயணிகள் […]

ஐரோப்பா

லண்டனில் திருவிழாவொன்றில் ஏற்பட்ட கூட்டநெரிசல் – பலர் படுகாயம்

  • August 2, 2026
  • 0 Comments

லண்டனில்   திருவிழாவொன்றில்  ஏற்பட்ட கூட்டநெரிசலால் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் கூட்டநெரிசலை தொடர்ந்து குறித்த விழா இரத்து செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Ghana Party in the Park என்ற நிகழ்ச்சியே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டபோது கூட்டம் அலைமோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 23 பேருக்கு அவசர சேவைகள் அல்லது நிகழ்ச்சி மருத்துவக் குழு முதலுதவிகளை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  

இலங்கை

மஹர சிறையில் இருந்து 104 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

  • August 2, 2026
  • 0 Comments

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அதிலுள்ள மொத்தம் 104 கைதிகள் வேறு பல சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் (செயல்பாடுகள்) மற்றும் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். அதன்படி, கைதிகள் தும்பர, வெலிக்கடை, பூசா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவ ஆகிய இடங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள் அறிக்கையில், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மஹரா சிறைச்சாலையின் நுழைவாயிலில் உள்ள சாலைத் தடுப்பிற்கு […]

இலங்கை

திருகோணமலையில் காட்டுத்தீ பரவல்

  • August 2, 2026
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ நீதிமன்ற வளாகத்துக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்குள் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (02) காலை இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. ஆனாலும் குறித்த பகுதிக்குள் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்ற போதிலும் தீ பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் தொடரில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

பொலிஸ் ஊரடங்கு நீக்கம்

  • August 2, 2026
  • 0 Comments

மஹர சிறைச்சாலை கலவரத்தை தொடர்ந்து நேற்று அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மஹர  சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த இந்த ஊரடங்கு, மஹாரா சிறை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி – மேற்கு, 246 C கெண்டலியத்த வீதி – வடக்கு, மற்றும் 181 G – தம்புவ ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு மாற்றம்

  • August 2, 2026
  • 0 Comments

மஹர சிறைச்சாலையில் இருந்து சுமார் 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மஹர சிறைக்கலவரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 06 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை

திருகோணமலை- ஸ்ரீபுர பொலிஸ் நிலையம் உத்தியோகப்பூர்வமாக திறப்பு

  • August 2, 2026
  • 0 Comments

திருகோணமலை- ஸ்ரீபுர பொலிஸ் நிலையத்தின் புதிய நிர்வாகக் கட்டிடம் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.எம்.யூ.மஹிந்த திஸாநாயக்கவினால் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. யுத்த காலத்தின் போது மக்களின் பாதுகாப்பிற்காக ஸ்ரீபுர கூட்டுறவு கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த குறித்த பொலிஸ் நிலையம் ஏழரை இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 30 இலட்சம் ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்ட நிலையில் 10 மாதத்திற்குள் ஸ்ரீபுர பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி […]

இலங்கை

தொடரும் சிறைக் கலவரங்கள் – இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகும்?

  • August 2, 2026
  • 0 Comments

இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் அவசர சீர்திருத்தங்கள் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். மஹாரா சிறைச்சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரம் ஒரு தனிப்பட்ட சம்பவத்தை விட ஆழமான ‘நிறுவன ரீதியான தோல்விகளையே’ பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நீர்கொழும்பு சிறைக் கலவரம் இடம்பெற்ற சில வாரங்களுக்குள் மற்றொரு […]

உலகம்

வொஷிங்டனில் அவசரநிலை அறிவிப்பு

  • August 2, 2026
  • 0 Comments

வொஷிங்டனில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக சுமார் 4000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்போகேன் (Spokane) பகுதியில் பரவலான வெளியேற்றங்களும் மின்சாரத் தடைகளும் ஏற்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்புப் பணிகளில் சுமார் 4,000 பேர் ஈடுபட்டுள்ளதாக, மாநிலத்தின் பொது நிலங்களுக்கான ஆணையர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஆளுனர் ர் பாப் பெர்குசன் (Bob Ferguson) மாநிலம் தழுவிய அவசரநிலையையும், தீயணைப்புத் தடையையும் அறிவித்தார். மேலும் குறித்த தீ விபத்தில் ஏற்பட்ட சேத […]

பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரையறுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை செய்தி

பிரதம நீதியரசரின் பதவிகாலத்தை 6 ஆண்டுகளாக நிர்ணயிக்கத் திட்டம்

  • August 2, 2026
  • 0 Comments

பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரையறுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் நோக்கில், அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள திருத்தங்களின் ஒரு பகுதியாக இது அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் பதவிக்கு அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தை நிர்ணயிக்கும் இந்த நடவடிக்கையினால், ஓய்வு பெறும் வயதை எட்டாவிட்டாலும் கூட, பிரதம நீதியரசர் ஆறு ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த பின்னர் […]