அமெரிக்காவின் தொடர் தாக்குதல் – ஈரானில் 18 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களின் காரணமாக ஈரானில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் முதலாம் திகதி அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதலில் மேலும் 108 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரானின் சுகாதார அமைச்சர் கூறினார்.
இதற்கிடையே ஹோர்முஸ் ஜலசந்தியின் கடற்கரைக்கு அருகில் நடந்த திருமண விழாவில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 67 பேர் காயமடைந்ததாகவும் ஈரானிய செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்று அதிகாலை முதல் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவை வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டதாகவும் குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது.



