ஆஸ்திரேலியா உலகம் செய்தி

நேபாளத்தில் பலி எண்ணிக்கை 1,200 ஆக அதிகரிப்பு: ட்ரோன் குழுக்களை அனுப்பும் ஆஸ்திரேலியா

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுமார் 4,200 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுமார் 4,200 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

இந்தச் சூழலில், அங்கு மனிதநேய உதவிகளை விரைவுபடுத்தியுள்ள ஆஸ்திரேலியா, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காகச் சிறப்பு ட்ரோன் நிபுணர்களை அனுப்பவுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் Penny Wong தெரிவிக்கையில்,

“இந்த பேரழிவின் தீவிரத்தை நாம் அனைவரும் ஊடகங்கள் வழியாகக் காண்கிறோம். நேபாள அதிகாரிகள் சுமார் 20,000 பேரை மீட்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுவரை 38 ஆஸ்திரேலியர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர்களைப் பற்றிய கவலைகள் ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகிறது” எனக் கூறினார்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் நேபாள ராணுவத்திற்கு உதவ 15 பேர் கொண்ட சிறப்பு ட்ரோன் இயக்கும் குழுவை ஆஸ்திரேலிய அரசு அனுப்பவுள்ளது.

இக்குழுவில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து தீயணைப்புத் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளதாக, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே 19 ஆஸ்திரேலிய அதிகாரிகள் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இவர்கள் அடுத்த சில நாட்களில் அங்கு விரைவர்.

அதிநவீன ட்ரோன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, வெப்ப நிலப்படவியல் (thermal imaging) மற்றும் நிலவரைபடச் சேவைகள் (mapping) மூலம் மீட்புப் பணிகளுக்கு உதவ உள்ளதாக பென்னி வோங் குறிப்பிட்டார்.

“தகவல்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதால் பல பகுதிகளைச் சென்றடைவது கடினமாக உள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காணாமல் போன ஆஸ்திரேலியர்கள் தங்கியிருந்ததாகக் கருதப்படும் ‘ஹோட்டல் கைலாஷ்’ மற்றும் ‘ஹோட்டல் ராயல் ஹிமாலயா’ ஆகிய பகுதிகளில் நேபாள ராணுவம் ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன் உதவியுடன் தீவிரத் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. மேலும், ஆஸ்திரேலியர்களின் கடைசி இருப்பிடத்தைக் கண்டறியும் வகையில், தொலைத்தொடர்புத் தரவுகளையும் நேபாள அதிகாரிகளுக்கு ஆஸ்திரேலியா வழங்கி வருகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி