இந்தியா செய்தி தமிழ்நாடு

கச்சத்தீவை மீட்குமாறு தேமு​திக வலியுறுத்து

மீனவர்​களின் பிரச்​சினைக்கு கச்​சத்​தீவை மீட்​பதே ஒரே தீர்வு என தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தெரி​வித்​தார்.

மீனவர்​களின் பிரச்​சினைக்கு கச்​சத்​தீவை மீட்​பதே ஒரே தீர்வு என தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தெரி​வித்​தார்.

சட்​டப்​பேர​வைக்கு வெளியே தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கருத்து வெளியிடுகையில் இது தொடர்பில் கூறியவை வருமாறு ,

” மீனவர்​களின் பிரச்​சினை​களுக்கு நிரந்​தரத் தீர்வு காண கச்​சத்​தீவை மீட்​டெடுப்​பது ஒன்றே வழி.

கடலில் ரசாயனம் மற்​றும் எண்​ணெய் கலப்​ப​தைத் தடுத்​து, மீன் வளம் மற்​றும் மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்க வேண்​டும்.

மீன்​பிடித் தடைக்​காலம் மற்​றும் புயல் காலங்​களில் உரிய நிவாரணம் வழங்க வேண்​டும். டீசல் மானி​யத்தை உயர்த்த வேண்​டும்.

மீனவப் பெண்​களுக்​குச் சுய உதவிக்​குழுக்​கள் மூலம் மாற்று வரு​மானத்​துக்​கான வழி​வகைகளைச் செய்ய வேண்​டும். ஆவின் பால் பதப்​படுத்​தும் குளிரூட்​டும் நிலை​யத்தை வேப்​பூரைத் தலை​மை​யிட​மாகக் கொண்டு அமைக்க வேண்​டும்.” – எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி