இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜயை பிரதமர் கதிரையில் அமரவைப்பாரா ராகுல் காந்தி?

விஜயை பிரதமர் கதிரையில் அமரவைப்பாரா ராகுல் காந்தி?
விஜய்யை 2026-ல் முதல்வர் நாற்காலியில் அமரவைத்த ராகுல் காந்தியே, 2029-ல் அவரது கையைப் பிடித்து பிரதமர் நாற்காலியிலும் அமரவைப்பார் என்று தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி கருத்துக்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்பதில் முதல்வர் விஜய் தெளிவாக இருக்கிறார் என காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் நேற்று கூறும்போது,
‘‘2029-ல் பிரதமர் யார் என்பதை இனி டெல்லி முடிவு செய்யப்போவது இல்லை; தமிழகம்தான் முடிவு செய்யும்.
எங்கள் தலைவர் விஜய்தான் 2029-ல் பிரதமராகப் போகிறார். 2026-ல் விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமர வைத்த ராகுல் காந்தியே, 2029-ல்அவரது கையைப் பிடித்து பிரதமர் நாற்காலியிலும் அமரவைப்பார்.
இந்திய அரசியலில் 2029-ல் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான மாற்றம் ஏற்படும்’’ என்றார்.
இதற்கு பதில் கொடுக்கும் விதமாக, பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத்தலைவர் தாரகை கத்பர்ட், ‘‘அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே தலைவர் ராகுல் காந்திதான்.
தவெக எம்எல்ஏக்கள் இன்னும் ரசிகர் மனப்பான்மையிலேயே பேசுகின்றனர். ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்பதில் முதல்வர் விஜய்யே தெளிவாக இருக்கிறார்.
எனவே, தேவையற்ற ஊகங்களுக்கு இடமளிக்க வேண்டாம். 2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர்’’ என்று தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி