உலகம்

ஆபிரகாம் லிங்கன் கப்பலில் உணவு பற்றாக்குறை – தவிக்கும் மாலுமிகள்

  • August 6, 2026
  • 0 Comments

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் பணியாற்றும் மாலுமிகளின் மன உறுதி கடுமையாக குறைந்து வருவதாக குடும்ப உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த விமானம் தாங்கி கப்பலில் பணியாற்றும் மாலுமிகளும் கடற்படை வீரர்களும், ஒரு வேளை உணவிற்கு கூட சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உணவிற்கு அரை கப் சாதமும் இரண்டு ரொட்டி துண்டுகளும் (tortillas) மட்டுமே பரிமாறப்படுவதாகவும், கப்பலின் கடையில் பெரும்பாலும் சோப்பு, டியோடரண்ட் மற்றும் பற்பசை போன்றவை பற்றாக்குறையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாலுமிகளின் மன உறுதி […]

உலகம்

உயிராபத்து ஏற்பட்டால் அகதிகளை திருப்ப அனுப்ப மாட்டோம் – மலேசிய அரசாங்கம்

  • August 6, 2026
  • 0 Comments

மலேசியாவில் வசித்து வரும் 5000 ரோகிங்ய அகதிகளுக்கு உயிராபத்து ஏற்பட்டால் அவர்கள் மீளவும் மியன்மாருக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துன்புறுத்தப்பட்ட ரோஹிங்கியா சிறுபான்மையினரைச் சேர்ந்த 5,000 பேரைத் திரும்பப் பெற்றுக்கொள்ள மியான்மர் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim) கடந்த வாரம் அறிவித்தார். இது மனித உரிமை அமைப்புகளிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் (Fahmi Fadzil),   “ஒரு பொறுப்பான நாடு என்ற முறையில், அவர்கள் துன்புறுத்தப்பட்டாலோ […]

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிலைமைகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கம் தனது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. உலகம் செய்தி மத்திய கிழக்கு

ஈரானில் இறுக்கமடையும் பாதுகாப்புக் கட்டுப்பாடு: 56 பேருக்கு மரண தண்டனை

  • August 6, 2026
  • 0 Comments

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிலைமைகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கம் தனது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. இதற்கமைய தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்புப் படையினரும் மதப் பொலிஸாரும் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கட்டாய ஹிஜாப் ஆடைக்கட்டுப்பாடு, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கான தடைகள் மற்றும் அரசுக்கு எதிர்ப்பாகக் கருதப்படும் நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக “உள்நாட்டு ஒற்றுமையை” பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஈரான் அதிகாரிகள் […]

யாழ்ப்பாணம், செம்மணி புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 அதிகரித்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: 500ஐ நெருங்கியது எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை

  • August 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 அதிகரித்துள்ளது. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 45ஆவது நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்ட போது, புதிதாக 08 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 05 மனித எலும்புக்கூடுகள் இன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. இதையடுத்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 494 […]

இலங்கை

நீர்கொழும்பு சிறைக் கலவரம் – ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

  • August 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து விசாரிக்கும் குழுவின் அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சரும், சட்டத்தரணியுமான ஹர்ஷனா நனயக்கர இன்று (06) பாராளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார். கடந்த மாதம் 5ஆம் திதகி நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த மோதலில் 22 கைதிகளும் பத்து அதிகாரிகளும் உயிரிழந்தனர். மேலும், இந்த மோதலில் 21 அதிகாரிகளும் 106 கைதிகளும் காயமடைந்ததாக நீதியமைச்சர் சுட்டிக்காட்டினார். மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே […]

இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கைக் கடற்பரப்புக்குள் இழுத்து வரப்பட்ட படகில் இருந்த 11 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

இலங்கைக் கடற்பரப்பில் தவித்த 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

  • August 6, 2026
  • 0 Comments

இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கைக் கடற்பரப்புக்குள் இழுத்து வரப்பட்ட படகில் இருந்த 11 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற குறித்த படகு, இயந்திரக் கோளாறு காரணமாக நெடுந்தீவு குயின் ரவஸ் பகுதிக்கு அருகில் உள்ள கலப் பகுதிக்குள் அகப்பட்டுள்ளது. இதனால் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் உதவி கோரியுள்ளனர். எனினும், கடல் வற்றுப்புக் காணப்பட்டதனால் கடற்படையினரின் படகுகளோ அல்லது ஏனைய மீன்பிடிப் படகுகளோ குறித்த பகுதிக்குச் செல்ல […]

ஐரோப்பா

இத்தாலியில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் உயர் வெப்ப எச்சரிக்கை

  • August 6, 2026
  • 0 Comments

இத்தாலியில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் இன்று உயர் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கைகள் வடகிழக்கில் உள்ள ட்ரைஸ்டே முதல் சிசிலியில் உள்ள பலேர்மோ (Palermo) வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. மேலும், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மக்களுக்கும் சுகாதார அபாயம் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான வானிலை பல நாடுகளில் வெப்பநிலையை 40°C-க்கு மேல் உயர்த்தியுள்ளது, இதனால் மில்லியன் கணக்கான மக்களுக்கு சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மத்திய […]

ஐரோப்பா

மியூனிக் நகரில் இடம்பெற்ற தாக்குதல் – ஆப்கான் நாட்டவருக்கு ஆயுள் தண்டனை

  • August 6, 2026
  • 0 Comments

கடந்த ஆண்டு மியூனிக்கில் கார் ஒன்று கூட்டத்தினர் மீது மோதியதில் சிறுமி ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்ததை தொடர்ந்த பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் ஆப்கான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜெர்மன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் மீது இரண்டு கொலைகள், 23 கொலை முயற்சிகள் மற்றும் 22 உடல்ரீதியான காயங்கள் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் […]

உலகம்

மத்தியக் கிழக்கு பதற்றம் – ரஷ்ய எண்ணெய் நிறுவனத்தை நாடும் சீனா

  • August 6, 2026
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான, சீனாவின் சினோபெக் நிறுவனம் மத்தியக் கிழக்கில் எண்ணெய் விநியோகம் குறைந்ததை தொடர்ந்து ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதலை அதிகரித்துள்ளதாக கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன. போர் தொடர்பான வர்த்தக இடையூறுகளுக்கு மத்தியில் உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரேசில் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா போன்ற மூலங்களிலிருந்து கிடைக்கும் எண்ணெயை விட ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதலில் ஈடுபட்டிருப்பது ஒப்பீட்டளவில் நிலையான உற்பத்தித் திறனைப் பராமரிக்கவும், வலுவான ஏற்றுமதி லாப வரம்புகளில் உபரி […]

உலகம்

கிழக்கு கடற்பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா

  • August 6, 2026
  • 0 Comments

வட கொரியா இன்றைய தினம் கிழக்கு கடற்பகுதியில் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையைச் செலுத்தி சோதனை செய்ததாக தென்கொரிய இராணுவம் அறிவித்துள்ளது. பியோங்யாங் ஏவிய ஏவுகணை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பான் அரசாங்கம் கூறியுள்ளது. வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சக்திவாய்ந்த சகோதரியான கிம் யோ ஜாங், ஜப்பானின் டோமஹாக் ஏவுகணைச் சோதனைகள் மற்றும் அதன் இராணுவ லட்சியங்கள் குறித்து சமீபத்தில் கடும் விமர்சனம் தெரிவித்ததை தொடர்ந்து இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது. […]