ஹாரி மற்றும் மேகன் தம்பத்தியினருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்
பிரித்தானிய இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பத்தியினர் பிரித்தானியாவில் புதிய ஆபத்துக்களை எதிர்நோக்கக்கூடும் என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சசெக்ஸ் கோமகனும் கோமகியும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னிட்டு பிரித்தானியாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
அங்கு அரச குடும்பத்திற்கு வெளியே சாதாரண வாழ்க்கையை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய அரசு குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஹாரி மற்றும் மேகன் தம்பதிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட ரீதியாக அவர்கள் கட்டணம் செலுத்துவதாக கூறியும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




