ஐரோப்பா

மியூனிக் நகரில் இடம்பெற்ற தாக்குதல் – ஆப்கான் நாட்டவருக்கு ஆயுள் தண்டனை

கடந்த ஆண்டு மியூனிக்கில் கார் ஒன்று கூட்டத்தினர் மீது மோதியதில் சிறுமி ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்ததை தொடர்ந்த பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆப்கான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜெர்மன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவர் மீது இரண்டு கொலைகள், 23 கொலை முயற்சிகள் மற்றும் 22 உடல்ரீதியான காயங்கள் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தக் குற்றங்கள் “குற்றத்தின் ஒரு குறிப்பிட்ட தீவிரத்தைக்” கொண்டிருப்பதாக நீதிமன்றம் கண்டறிந்தது. இதன்காரணமாக அவர் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்பை நீதிமன்றம் கணிசமாக குறைத்துள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்