உலகம்

மத்தியக் கிழக்கு பதற்றம் – ரஷ்ய எண்ணெய் நிறுவனத்தை நாடும் சீனா

உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான, சீனாவின் சினோபெக் நிறுவனம் மத்தியக் கிழக்கில் எண்ணெய் விநியோகம் குறைந்ததை தொடர்ந்து ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதலை அதிகரித்துள்ளதாக கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.

போர் தொடர்பான வர்த்தக இடையூறுகளுக்கு மத்தியில் உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரேசில் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா போன்ற மூலங்களிலிருந்து கிடைக்கும் எண்ணெயை விட ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதலில் ஈடுபட்டிருப்பது ஒப்பீட்டளவில் நிலையான உற்பத்தித் திறனைப் பராமரிக்கவும், வலுவான ஏற்றுமதி லாப வரம்புகளில் உபரி எரிபொருளை அனுப்பவும் உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி சினோபெக் நிறுவனம், ஒரு நாளைக்கு சுமார் 241,000 முதல் 320,000 பீப்பாய்கள் வரை எண்ணெய் கொள்முதலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உலகின் முன்னணி கொள்முதல் நாடான சீனா, ஈரான் போர் தொடங்கியதிலிருந்து தனது ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியை பெருமளவில் குறைத்துள்ளது.

ஜூன் மாத கொள்முதல், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 41 சதவீதம்  சரிந்துள்ளது. இருப்பினும், அது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான தனது எரிபொருள் ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்