ஐரோப்பா

ஜெர்மனியின் சரக்கு விமான மையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதல் -ரஷ்யா மறுப்பு

  • August 8, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் சரக்கு விமான மையத்தில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் ட்ரோன் தாக்குதலை பெர்லினில் உள்ள ரஷ்ய தூதரகம் மறுத்துள்ளது. இது, ரஷ்யா மீது ஆதாரமின்றி சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மற்றுமொரு உதாரணம் என்று தூதரகம் கூறியுள்ளது. அதேநேரம் ஜெர்மனியில் ரஷ்ய எதிர்ப்பு வெறியின் ஒரு புதிய அலை குறித்து தூதரகம் தனது கவலையை வெளிப்படுத்தி   அறிக்கையொன்றையும் பகிர்ந்துள்ளது. கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு முக்கியமான பொது சரக்கு மற்றும் நேட்டோ தளவாட மையமான லீப்ஜிக்/ஹாலே விமான நிலையத்தில், ட்ரோன் ஒன்று […]

சுமார் 20 மாதங்களாகக் வெற்றிடமாக இருந்த ஆஸ்திரேலியாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவிக்கு, முன்னாள் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் பிராட்டின் (David Brat) நியமனத்தை டிரம்ப் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ட்ரம்பின் விசுவாசியை ஆஸ்திரேலியா தூதுவராக களமிறக்கும் அமெரிக்கா

  • August 8, 2026
  • 0 Comments

சுமார் 20 மாதங்களாகக் வெற்றிடமாக இருந்த ஆஸ்திரேலியாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவிக்கு, முன்னாள் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் பிராட்டின் (David Brat) நியமனத்தை டிரம்ப் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதற்கான முன்மொழிவு வெளியிடப்பட்ட நிலையில், 2024 நவம்பரில் அப்படவியிலிருந்து விலகிய கரோலின் கென்னடிக்கு (Caroline Kennedy) பதிலாக இவர் தற்போது பொறுப்பேற்கவுள்ளார். தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்திருந்த பிராட், முக்கிய கனிமங்கள் சார்ந்த ஒப்பந்தம், பாதுகாப்பு ஒத்துழைப்பு […]

உலகம்

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதிக்கான தேர்தல் – போராட்டங்களில் 44 பேர் உயிரிழப்பு

  • August 8, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் தேர்தலுக்கு எதிரான போராட்டங்களில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. காஷ்மீரில் செயல்படும் அவாமி ஆக்ஷன் கமிட்டி, கடந்த மாதம் நடைபெற்ற மூன்று கட்டத் தேர்தலின் முதல் கட்டத்திலிருந்து பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. துப்பாக்கி முனையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தல் ஒரு மோசடித் தேர்தல் என்று கூறி, தேர்தலைப் புறக்கணிக்குமாறும் அவாமி ஆக்ஷன் கமிட்டி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தற்போதைய தேர்தல் நியாயமான அல்லது […]

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் சூழ்ச்சி மற்றும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும், இதனைச் சாதாரண விடயமாகக் கருதாமல் முழுமையான விசாரணை வேட்டை நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரங்களின் பின்னணி என்ன? விசாரணை வேட்டை தீவிரம்

  • August 8, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் சூழ்ச்சி மற்றும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும், இதனைச் சாதாரண விடயமாகக் கருதாமல் முழுமையான விசாரணை வேட்டை நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பும், சட்டம் மற்றும் ஒழுங்கும் முழுமையாக உறுதிப்படுத்தப்படும் என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் […]

உலகம்

விண்வெளி ஏவுகணை பாதுகாப்பு திட்டம் – 3.2 பில்லியன் நிதி ஒதக்கீடு

  • August 8, 2026
  • 0 Comments

விண்வெளி அடிப்படையிலான ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்திற்கான முதல் சோதனைகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் நடத்த பென்டகன் இலக்கு வைத்துள்ளது. இது தொடர்பான உத்தியோகப்பூர்வ செயலாக்க திட்டங்கள் வரும் 2027 ஆம் ஆண்டு  வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் கோல்டன் டோம் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த விண்வெளி அடிப்படையிலான ஏவுகணை இடைமறிப்பான் திட்டம் முக்கிய மைல்கற்களாக  பார்க்கப்படுகிறது. ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்காக, ஆயுதம் தாங்கிய செயற்கைக்கோள்களின் முன்மாதிரிகளை உருவாக்க 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த உக்ரைன் இணக்கம்

  • August 8, 2026
  • 0 Comments

சமீபகாலமாக கருங்கடலில் ரஷ்ய கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்த நடவடிக்கையானது ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நடவடிக்கையானது கருங்கடல் பகுதியில் பயணிக்கும் வேறு நாடுகளின் கப்பல்களுக்கும் ஆபத்தாக மாறியுள்ளது. இந்நிலையில் ரஷ்யா அல்லாத எண்ணெய் கப்பல்களையும் கருங்கடல் உள்கட்டமைப்புகளையும் குறிவைக்க வேண்டாம் என உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி வர்த்தகக் கப்பல் உரிமையாளர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் தொடர்பு மையங்களை […]

தாய்லாந்து பேங்காக்கில் சிறுவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தும் 22 பேர் காயமடைந்தும் உள்ள நிலையில், தாய்லாந்து பிரதமர் புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை அறிமுகப்படுத்தப் போவதாக உறுதியளித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கொடூர சம்பவத்தையடுத்து துப்பாக்கிச் சட்டத்தை கடுமையாக்குகிறது தாய்லாந்து

  • August 8, 2026
  • 0 Comments

தாய்லாந்து பேங்காக்கில் சிறுவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தும் 22 பேர் காயமடைந்தும் உள்ள நிலையில், தாய்லாந்து பிரதமர் புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை அறிமுகப்படுத்தப் போவதாக உறுதியளித்துள்ளார். 14 வயதான அந்தச் சிறுவன், தான் வசித்து வந்த வீட்டில் வைத்து தனது தாத்தா பாட்டியைச் சுட்டுக் கொன்ற பிறகு, தான் கல்வி கற்ற நோந்தாபுரியில் உள்ள டெப்சிரின் (Debsirin) பாடசாலைக்குச் சென்றுள்ளார். அங்கு ஐந்து ஆசிரியர்களைச் சுட்டுக் கொன்ற பின்னர், […]

“காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்திகளுக்காக இந்தியா நிதியுதவி வழங்கியுள்ளது. எனினும், அந்நிதி இதுவரை பயன்படுத்தப்படாமல் உள்ளது. அரசியல் இலங்கை செய்தி

இந்திய நிதியை வடக்கில் எவ்வாறு பயன்படுத்தபோகின்றது அரசு?

  • August 8, 2026
  • 0 Comments

“காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்திகளுக்காக இந்தியா நிதியுதவி வழங்கியுள்ளது. எனினும், அந்நிதி இதுவரை பயன்படுத்தப்படாமல் உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்நிதியைப் பயன்படுத்தி அபிவிருத்திகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்” என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா தெரிவித்ததாவது: “நாட்டில் மீண்டும் ஒரு […]

"இனப்பிரச்சினை தொடர்பில் நமக்குத் தெளிவான புரிதல் உள்ளது. நாம் போலி வாக்குறுதிகளை வழங்கவில்லை. உண்மையான வேலைத்திட்டத்துடனேயே வடக்கிற்குச் செல்கிறோம்” என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். இலங்கை செய்தி

NPP அரசின் நேர்மையாலேயே வடக்கு மக்கள் மத்தியில் பேராதரவு

  • August 8, 2026
  • 0 Comments

“இனப்பிரச்சினை தொடர்பில் நமக்குத் தெளிவான புரிதல் உள்ளது. நாம் போலி வாக்குறுதிகளை வழங்கவில்லை. உண்மையான வேலைத்திட்டத்துடனேயே வடக்கிற்குச் செல்கிறோம்” என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தி, இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்தினார்கள். ஆனால், இனப்பிரச்சினை குறித்து நாம் […]

இலங்கை

சிறைச்சாலை கலவரங்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – சஜித் விசனம்

  • August 7, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பாதுகாப்பற்ற நிலைமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று  (07) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், யார் என்ன தெரிவித்தாலும் இது தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். அத்துடன் சிறைச்சாலைகளில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்களை அடிப்படையாகக்கொண்டு, நாங்கள் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்தோம். அதில் அமைச்சருக்கு […]