உலகம்

தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பிக்க பெரு, மெக்சிகோ இணக்கம்

பெருவும் மெக்சிகோவும் தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பிக்க ஒப்புக்கொண்டுள்ளன.

இருநாடுகளும் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லிமாவில் உள்ள மெக்சிகோ தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்த முன்னாள் பிரதமர் பெட்ஸி சாவேஸ் (Betssy Chavez), மெக்சிகோவிற்குப் பயணம் செய்ய லிமா அரசாங்கம் பாதுகாப்பு அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாவேஸுக்கு மெக்சிகோ அரசாங்கம் தஞ்சம் வழங்கியதைத் தொடர்ந்து, பெருவுடனான தூதரக உறவுகள் சீர்குலைந்திருந்த நிலையில், தற்போது உறவுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்