உலகம்

காங்கோவில் எபோலா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4000ஐக் கடந்தது

காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000-ஐத் தாண்டியுள்ளது என அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.

உலகின் இரண்டாவது தொற்று பரவலாக இனங்காணப்பட்டுள்ள எபோலா தொற்றானது மே மாதம் நோய் நிலைமை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

உண்மையான பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட மிக அதிகமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் பொது சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில், 1,850 இறப்புகள் உட்பட, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 4,053-ஐ எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்நாட்டின் இடுரி (Ituri) , வடக்கு கிவு, தெற்கு கிவு, ஹவுட்-உலே (Haut-Uele) மற்றும் ஷோபோ (Tshopo) ஆகிய ஐந்து மாகாணங்களில் உச்சக்கட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்