உலகம்

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதிக்கான தேர்தல் – போராட்டங்களில் 44 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் தேர்தலுக்கு எதிரான போராட்டங்களில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

காஷ்மீரில் செயல்படும் அவாமி ஆக்ஷன் கமிட்டி, கடந்த மாதம் நடைபெற்ற மூன்று கட்டத் தேர்தலின் முதல் கட்டத்திலிருந்து பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

துப்பாக்கி முனையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தல் ஒரு மோசடித் தேர்தல் என்று கூறி, தேர்தலைப் புறக்கணிக்குமாறும் அவாமி ஆக்ஷன் கமிட்டி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தற்போதைய தேர்தல் நியாயமான அல்லது ஜனநாயக முறையில் நடத்தப்படாது என்றும், தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்படும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் இருக்காது என்றும் அவாமி ஆக்ஷன் கமிட்டி அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஷ்மீர் தேர்தலின் முதல் கட்டம் ஜூலை 27-ஆம் திகதியும், இரண்டாம் கட்டம் ஜூலை 1-ஆம் திகதியும் நடைபெற்ற நிலையில், இறுதிக் கட்டம் 10-ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்