ஐரோப்பா

ஜெர்மனியின் சரக்கு விமான மையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதல் -ரஷ்யா மறுப்பு

ஜெர்மனியின் சரக்கு விமான மையத்தில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் ட்ரோன் தாக்குதலை பெர்லினில் உள்ள ரஷ்ய தூதரகம் மறுத்துள்ளது.

இது, ரஷ்யா மீது ஆதாரமின்றி சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மற்றுமொரு உதாரணம் என்று தூதரகம் கூறியுள்ளது.

அதேநேரம் ஜெர்மனியில் ரஷ்ய எதிர்ப்பு வெறியின் ஒரு புதிய அலை குறித்து தூதரகம் தனது கவலையை வெளிப்படுத்தி   அறிக்கையொன்றையும் பகிர்ந்துள்ளது.

கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு முக்கியமான பொது சரக்கு மற்றும் நேட்டோ தளவாட மையமான லீப்ஜிக்/ஹாலே விமான நிலையத்தில், ட்ரோன் ஒன்று விழுந்தது.

இந்த விமான நிலையம், உக்ரைனின் அன்டோனோவ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் பல பெரிய An-124 சரக்கு விமானங்களின் தளமாகவும் உள்ளது.

இந்த ட்ரோனில் வெடிபொருட்கள் மற்றும் ஒரு டெட்டனேட்டர் பொருத்தப்பட்டிருந்ததாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

கூடுதலாக, விமான நிலையத்திற்கு அருகில்  சரக்கு விமானம் ஒன்று ட்ரோன் என நம்பப்படும் மர்ம பொருள் மீது மோதியது.

ஜெர்மன் அரசாங்க உறுப்பினர்களும் பிற அதிகாரிகளும் இந்தச் சம்பவத்திற்காக எந்தவொரு வெளிநாட்டையும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டவில்லை, ஆனால் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷ்யா மீது குற்றம் சாட்டியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த ரஷ்யா தாக்குதல்களை மறுத்ததுடன், ஜெர்மனி ரஷ்யா மீது கொண்டிருக்கும் வெறுப்பையே இந்த குற்றச்சாட்டுகள் புலப்படுத்துவதாக கூறியுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்