ஐரோப்பா

கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த உக்ரைன் இணக்கம்

சமீபகாலமாக கருங்கடலில் ரஷ்ய கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்த நடவடிக்கையானது ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நடவடிக்கையானது கருங்கடல் பகுதியில் பயணிக்கும் வேறு நாடுகளின் கப்பல்களுக்கும் ஆபத்தாக மாறியுள்ளது.

இந்நிலையில் ரஷ்யா அல்லாத எண்ணெய் கப்பல்களையும் கருங்கடல் உள்கட்டமைப்புகளையும் குறிவைக்க வேண்டாம் என உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி வர்த்தகக் கப்பல் உரிமையாளர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் தொடர்பு மையங்களை உக்ரைன் அமைத்துள்ளதாகக் கூறினார்.

ரஷ்யாவின் நோவோரோசிஸ்கில் (Novorossiysk) உள்ள காஸ்பியன் பைப்லைன் கன்சார்டியம் (Consortium ) முனையத்திற்கு அருகே கப்பல்கள் மீது சமீபத்தில் நடந்த தொடர் தாக்குதல்களால் செயல்பாடுகள் முடங்கிய நிலையில், அமெரிக்க அதிகாரிகளுக்கும் – உக்ரைன் அதிகாரிகளுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் மேற்படி இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்