உலகம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் அவசரகாலநிலை அறிவிப்பு

  • August 8, 2026
  • 0 Comments

கனடா முழுவதும் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் (British Columbia) சம்மர்லேண்ட் மாவட்டம் (Summerland) இன்று அவசரகால நிலையை அறிவித்தது. இதனால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு அதிகமான நிலம் காட்டுத்தீக் காரணமாக  சேதமடைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் சம்மர்லேண்ட் மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் கொதித்தாரிய நீரை பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காட்டுத்தீ அச்சுறுத்தல் காரணமாக நீர் சுத்திகரிப்பு நிலையம் […]

உலகம்

ஈரான், ஓமான் ஒப்பந்தம் – ஹோர்மூஸ் ஜலசந்தியை மீளவும் திறக்கக்கூடும் : நம்பிக்கையில் அமெரிக்கா

  • August 8, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் ஓமான் விரைவில் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்யும் என்றும், அது ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வழிவகுக்கும் என்றும் அமெரிக்கா எதிர்பார்ப்பதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 05 மாதமாக  தடைபட்ட எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா நம்புவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “ஜலசந்தி விவகாரத்தில் ஓமானுக்கும் ஈரானுக்கும் இடையே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, விரைவில் ஒரு ஒப்பந்தத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ரொய்டர்ஸ் […]

நெதர்லாந்தின் - ரோட்டர்டாமில் (Rotterdam) இன்று காலை கத்தி குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஐரோப்பா

நெதர்லாந்தில் இருவேறு இடங்களில் கத்திகுத்து தாக்குதல் – இருவர் படுகாயம்

  • August 8, 2026
  • 0 Comments

நெதர்லாந்தின் – ரோட்டர்டாமில் (Rotterdam) இன்று காலை கத்தி குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் அடையாளம் தெரியாத இருவர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மற்ற நபருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை இந்த சம்பவம் இடம்பெற்று சுமார் 30 நிமிடங்கள் கழித்து, […]

ஐரோப்பா

ஸ்பெயினின் அண்டலூசியா பகுதியில் காட்டுத்தீ – களத்தில் இறங்கிய 275 வீரர்கள்

  • August 8, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் தெற்கு அண்டலூசியா பகுதியில் இன்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 275 இற்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது எந்தவொரு குடியிருப்புப் பகுதிக்கும் அச்சுறுத்தல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவில் மற்றும் போர்த்துகீசிய எல்லைக்கு இடையில் தீ பரவியதாகவும், இதனால் சுமார் 4,000 ஹெக்டேர் பரப்பளவு சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலப் பணிகளுக்கான இராணுவப் பிரிவைச் சேர்ந்த அறுபது வீரர்கள், 275 தீயணைப்பு வீரர்கள், 20 விமானங்கள் மற்றும் கனரக […]

அர்ஜென்டீனாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையு ஜார்ஜ் ஹொரேசியோ மெஸ்ஸி (68), நீண்ட நாட்களாகப் பாதிக்கப்பட்டிருந்த நோய் காரணமாகக் காலமானார். செய்தி விளையாட்டு

லியோனல் மெஸ்ஸியின் தந்தை காலமானார்

  • August 8, 2026
  • 0 Comments

அர்ஜென்டீனாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையு ஜார்ஜ் ஹொரேசியோ மெஸ்ஸி (68), நீண்ட நாட்களாகப் பாதிக்கப்பட்டிருந்த நோய் காரணமாகக் காலமானார். அர்ஜென்டீனாவின் ரொசாரியோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. ஜூன் மாதம் லியோனல் மெஸ்ஸி FIFA உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஜார்ஜ் மெஸ்ஸி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருவதைக் குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். மேலும், அவரது […]

ஐரோப்பா

எட்னா எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் பாதிப்பு

  • August 8, 2026
  • 0 Comments

உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான எட்னா மலை இன்று வெடித்து சாம்பலையும், புகையையும் கக்கி வருகிறது. இதன்காரணமாக சிசிலிக்கு அருகில் உள்ள விமான நிலையங்கள் தங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதன்படி “கட்டானியா விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது விமான நிலையத்தில் உள்ள விமானங்களின் புறப்பாடு வழக்கம் போல் இயங்குகிறது,” என்றும் கூறப்படுகிறது. 3,324 மீட்டர் உயரமுள்ள எட்னா, ஐரோப்பாவின் மிக […]

இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்துவதற்காக, தமிழகம் பிரப்பன்வலசை கடற்கரைப்பகுதிக்கு வேனில் கொண்டுவரப்பட்ட 297 கிலோகிராம் கஞ்சா பொட்டலங்களை இன்று சனிக்கிழமை (08) இராமநாதபுரம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்தியா செய்தி தமிழ்நாடு

இலங்கைக்கு கடத்த முயன்ற 290 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்

  • August 8, 2026
  • 0 Comments

இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்துவதற்காக, தமிழகம் பிரப்பன்வலசை கடற்கரைப்பகுதிக்கு வேனில் கொண்டுவரப்பட்ட 297 கிலோகிராம் கஞ்சா பொட்டலங்களை இன்று சனிக்கிழமை (08) இராமநாதபுரம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேனும் கைப்பற்றப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் – இராமேஸ்வரம் உட்கோட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பிரப்பன்வலசை கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த வேன் […]

உலகம்

காசா அமைதி திட்டம் – ஏற்க மறுக்கும் இஸ்ரேல் : அழுத்தம் கொடுக்கும் ஹமாஸ்

  • August 8, 2026
  • 0 Comments

காசா அமைதித் திட்டத்தைத் தொடரத் தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறியதுடன், இந்த ஒப்பந்ததிற்கு இஸ்ரேலை ஒப்புக்கொள்ள வைக்க அமெரிக்கா  அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அப்பகுதியில் புதிதாக உருவாகிவரும் பாலஸ்தீனிய ஆளும் குழுவிடம் போராளிகள் ஆயுதங்களை ஒப்படைக்கும் திட்டத்தின் சமீபத்திய கட்டத்திற்குத் தாங்கள் ஆதரவளிப்பதாக,  ட்ரம்பின் அமைதி வாரியத்திடம் ஹமாஸ் தெரிவித்தது. “இஸ்ரேலின் ஒப்புதல் கிடைத்து, இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தத் தொடங்கினால், ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி இரண்டாம் கட்டத்திற்குச் செல்லத் தயாராக இருப்பதாக ஹமாஸும் மற்ற […]

ஐரோப்பா

கருங்கடல் ஊடான கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்திய துருக்கி

  • August 8, 2026
  • 0 Comments

கருங்கடல் பாதையில் துருக்கி கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பாதையில் உக்ரைன், ரஷ்யா தாக்குதல்களை விரிவுப்படுத்தி வருவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய எண்ணெய் மற்றும் தானிய ஏற்றுமதி மையமான ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் (Novorossiysk) நோக்கிச் செல்லும்  கப்பல்களிடம், கடலோரப் பாதுகாப்பு பொது இயக்குநரகம், தற்போது அத்தகைய பயணங்களுக்குப் போக்குவரத்து அனுமதிகளை வழங்குவதில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கான எந்த விளக்கத்தையும் அதிகாரிகள் அளிக்கவில்லை என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, கருங்கடலுக்குள் கப்பல்களின் […]

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழியில் மேலும் 08 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 8, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 47வது நாளாக நடைபெற்றது. இதன்போது மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் அடையாளம் காணப்பட்ட 05 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 101 நாட்கள் […]