எட்னா எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் பாதிப்பு
உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான எட்னா மலை இன்று வெடித்து சாம்பலையும், புகையையும் கக்கி வருகிறது.
இதன்காரணமாக சிசிலிக்கு அருகில் உள்ள விமான நிலையங்கள் தங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
இதன்படி “கட்டானியா விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது விமான நிலையத்தில் உள்ள விமானங்களின் புறப்பாடு வழக்கம் போல் இயங்குகிறது,” என்றும் கூறப்படுகிறது.
3,324 மீட்டர் உயரமுள்ள எட்னா, ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலையாகும். இது கடந்த 500,000 ஆண்டுகளில் அடிக்கடி வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




