உலகம்

இந்தோனேசியாவின் புரோமோ மலை தேசியப் பூங்கா காலவரையறையின்றி மூடப்படுகிறது

  • August 9, 2026
  • 0 Comments

கிழக்கு ஜாவாவில் உள்ள புரோமோ மலை தேசியப் பூங்காவை ( Bromo national park) மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவலானது எரிமலை நோக்கி விரிவடைந்ததே பூங்காவை மூடக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மூடல் ஆகஸ்ட் 8 மாலை முதல் காலவரையறையின்றி  அமலுக்கு வந்துள்ளது என்று பூங்கா நிர்வாகி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “பார்வையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பைப் பேணுவதகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி […]

வன்முறை வெடித்த குருவிட்ட சிறைச்சாலை மற்றும் நீர்கொழும்பு – பள்ளஞ்சேன திறந்தவெளி சிறைச்சாலை உட்பட இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு வெகுவாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

சிறைச்சாலைகளில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு

  • August 9, 2026
  • 0 Comments

வன்முறை வெடித்த குருவிட்ட சிறைச்சாலை மற்றும் நீர்கொழும்பு – பள்ளஞ்சேன திறந்தவெளி சிறைச்சாலை உட்பட இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு வெகுவாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலதிகமாகப் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) பாதுகாப்புக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், புலனாய்வுப் பிரிவினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் குறுகிய காலப்பகுதிக்குள் நீர்கொழும்பு, மஹர, வெலிக்கடை (மகசின்), குருவிட்ட மற்றும் பள்ளஞ்சேன ஆகிய ஐந்து சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து குழப்ப நிலைகள் உருவெடுத்தன. இந்த மோதல் சம்பவங்களால் உயிரிழப்புகள் […]

உலகம்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி – மொஜ்தபா காமேனியின் காணொளி வெளியீடு

  • August 9, 2026
  • 0 Comments

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் ஆரோக்கியத்துடுன் இருக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. ஈரானின் மெஹர் (Mehr) செய்து நிறுவனம் வெளியிட்டுள்ள குறித்த காணொளியில் மொஜ்தபா காமேனி மதம் தொடர்பான நிகழ்வில் பங்கேற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் இந்த காணொளி எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. உச்சத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, மொஜ்தபா கமேனி இடம்பெற்று வெளியாகியுள்ள முதல் வீடியோ இதுவாகும். https://x.com/RT_com/status/2086198246121042165?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2086198246121042165%7Ctwgr%5E73ef6a7f2d3d402f2b6a0eee82b73e3e3993f09b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fworld%2Fmojtaba-khamenei-health-rumors-new-video-emerges  

இலங்கையில் குறுகிய காலப்பகுதிக்குள் ஐந்து சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறை மோதல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 163க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இலங்கை செய்தி

5 சிறைச்சாலைகளில் மோதல் – 36 பேர் பலி: பலர் காயம்

  • August 9, 2026
  • 0 Comments

இலங்கையில் குறுகிய காலப்பகுதிக்குள் ஐந்து சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறை மோதல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 163க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவற்றில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலையே மிகப்பெரிய கலவரமாகப் பதிவாகியுள்ளது. இங்கு நடைபெற்ற வன்முறையில் 10 சிறைச்சாலை அதிகாரிகள், 22 கைதிகள் உட்பட 32 பேர் உயிரிழந்தனர். அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஏனைய சிறைச்சாலைகளில் பதிவான பாதிப்பு விவரங்கள் […]

உலகம்

சவுதியின் ஜசான் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து

  • August 9, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் உள்ள அராம்கோவின் ஜசான் சுத்திகரிப்பு ஆலையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சவூதி எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அராம்கோவின் தொழில்துறை பாதுகாப்பு குழுக்கள் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சம்பவத்தைக் கையாள்வதற்கான நடைமுறைகளை முடித்து வருவதாகவும் எரிசக்தி அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில பதிவிட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதை அது குறிப்பிடவில்லை. ஜசான் சுத்திகரிப்பு ஆலை ஒரு நாளைக்கு 400,000 பீப்பாய்கள் […]

இந்தியா

இமாச்சல் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 08 பேர் உயிரிழப்பு

  • August 8, 2026
  • 0 Comments

வட இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி தாழ்வான பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 08 பேர் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவிலிருந்து சுமார் 393 கி.மீ வடக்கே உள்ள சம்பா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் இன்று காலை  விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 18 பேர் பயணம் செய்ததாக  முதற்கட்ட […]

உலகம் செய்தி

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யக்கூட தயார்: ஈரான் ஜனாதிபதி உருக்கம்

  • August 8, 2026
  • 0 Comments

ஈரான் தலைமைத்துவம் எடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் ஈரான் மக்கள் இறுதிவரை உறுதுணையாக நிற்பார்கள் என்று ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார். போரிடுவது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் இராணுவத் தளபதிகளுக்கே உள்ளதாகவும், அவர்களின் ஆற்றலை அவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்புக்காகத் தனது உயிரையும் தியாகம் செய்யத் தயார் என்று கூறியுள்ள அவர், படுகொலைகளுக்குத் தான் அஞ்சப்போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரான் ஜனாதிபதிக்கும், உச்ச தலைவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு […]

கருத்து & பகுப்பாய்வு

03 முஸ்லிம் நாடுகளின் சேர்க்கையால் மத்தியக் கிழக்கின் போர் மேகம் களையுமா?

  • August 8, 2026
  • 0 Comments

சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையேயான  பாதுகாப்பு ஒப்பந்தம்,  ஈரானைத் தடுக்கவும், நம்பகத்தன்மையற்ற அமெரிக்காவைச் சமன் செய்யவும், இஸ்ரேலுக்கு ஒரு செய்தியை அனுப்பவும் முயலும் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மத்திய கிழக்கு போர் நீடித்து வரும் நிலையில், இந்தக் கூட்டணி, அமெரிக்காவின் மூலோபாய கூட்டாளிகளான மூன்று சக்திவாய்ந்த இஸ்லாமிய  நாடுகளை, ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலையும் அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதும் நேட்டோ பாணியிலான ஒரு விதியுடன் பிணைக்கிறது. […]

உலகம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் அவசரகாலநிலை அறிவிப்பு

  • August 8, 2026
  • 0 Comments

கனடா முழுவதும் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் (British Columbia) சம்மர்லேண்ட் மாவட்டம் (Summerland) இன்று அவசரகால நிலையை அறிவித்தது. இதனால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு அதிகமான நிலம் காட்டுத்தீக் காரணமாக  சேதமடைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் சம்மர்லேண்ட் மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் கொதித்தாரிய நீரை பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காட்டுத்தீ அச்சுறுத்தல் காரணமாக நீர் சுத்திகரிப்பு நிலையம் […]

உலகம்

ஈரான், ஓமான் ஒப்பந்தம் – ஹோர்மூஸ் ஜலசந்தியை மீளவும் திறக்கக்கூடும் : நம்பிக்கையில் அமெரிக்கா

  • August 8, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் ஓமான் விரைவில் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்யும் என்றும், அது ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வழிவகுக்கும் என்றும் அமெரிக்கா எதிர்பார்ப்பதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 05 மாதமாக  தடைபட்ட எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா நம்புவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “ஜலசந்தி விவகாரத்தில் ஓமானுக்கும் ஈரானுக்கும் இடையே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, விரைவில் ஒரு ஒப்பந்தத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ரொய்டர்ஸ் […]