நெதர்லாந்தில் இருவேறு இடங்களில் கத்திகுத்து தாக்குதல் – இருவர் படுகாயம்
நெதர்லாந்தின் – ரோட்டர்டாமில் (Rotterdam) இன்று காலை கத்தி குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில் அடையாளம் தெரியாத இருவர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மற்ற நபருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை இந்த சம்பவம் இடம்பெற்று சுமார் 30 நிமிடங்கள் கழித்து, நகரின் வடமேற்கில் உள்ள ப்ரூக் வான் சைரீன் (Brug Van Cyrene) பாலத்தில் மற்றொரு கத்திக்குத்து முயற்சி நடந்ததாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




