உலகம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் அவசரகாலநிலை அறிவிப்பு

கனடா முழுவதும் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் (British Columbia) சம்மர்லேண்ட் மாவட்டம் (Summerland) இன்று அவசரகால நிலையை அறிவித்தது.

இதனால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு அதிகமான நிலம் காட்டுத்தீக் காரணமாக  சேதமடைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் சம்மர்லேண்ட் மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் கொதித்தாரிய நீரை பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீ அச்சுறுத்தல் காரணமாக நீர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளமையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டில், கனடாவின் ஒன்டாரியோ மற்றும் கியூபெக் உள்ளிட்ட பல பிராந்தியங்கள், வெப்பமான, வறண்ட வானிலையுடன் போராடி வருகின்றன. இதனால் இப்பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்