உலகம்

காசா அமைதி திட்டம் – ஏற்க மறுக்கும் இஸ்ரேல் : அழுத்தம் கொடுக்கும் ஹமாஸ்

காசா அமைதித் திட்டத்தைத் தொடரத் தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறியதுடன், இந்த ஒப்பந்ததிற்கு இஸ்ரேலை ஒப்புக்கொள்ள வைக்க அமெரிக்கா  அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அப்பகுதியில் புதிதாக உருவாகிவரும் பாலஸ்தீனிய ஆளும் குழுவிடம் போராளிகள் ஆயுதங்களை ஒப்படைக்கும் திட்டத்தின் சமீபத்திய கட்டத்திற்குத் தாங்கள் ஆதரவளிப்பதாக,  ட்ரம்பின் அமைதி வாரியத்திடம் ஹமாஸ் தெரிவித்தது.

“இஸ்ரேலின் ஒப்புதல் கிடைத்து, இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தத் தொடங்கினால், ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி இரண்டாம் கட்டத்திற்குச் செல்லத் தயாராக இருப்பதாக ஹமாஸும் மற்ற பிரிவுகளும் மத்தியஸ்தர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் ஒப்பந்தத்தை செயல்படுத்தி இரண்டாம் கட்டத்திற்கு செல்ல இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஹமாஸ் வலியுறுத்தியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் கடுமையான மறுதேர்தல் சவாலையும், காசா ஒப்பந்தத்திற்கு தனது வலதுசாரி ஆதரவாளர்களிடமிருந்து பரவலான எதிர்ப்பையும் எதிர்கொண்டுள்ள இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைதி வாரியம் முன்வைத்த “வரைவுக்கு” இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்