ஐரோப்பா

பிரான்ஸில் ரோந்து சென்ற இரு அதிகாரிகள் மீது கத்திகுத்து தாக்குதல்

  • August 11, 2026
  • 0 Comments

பிரான்ஸில் இரண்டு மாநகராட்சி காவல்துறையினர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வில்சன் மாவட்டத்தில் உள்ள ரூ டி’ஆஸ்டர்லிட்ஸ் (d’Austerlitz) தெருவில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு அதிகாரிகளும் ரோந்து சென்றுக்கொண்டிருந்தபோது ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர் தாக்குதலை நடத்தியுள்ளார். சந்தேக நபர் மூன்று கத்திகளை வைத்திருந்ததாக பிரெஞ்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர், அதிகாரிகளை நோக்கி சைகை காட்டிய பின்னர் அவர்களை அணுகி, கத்தியுடன் அவர்கள் மீது பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. […]

செய்தி விளையாட்டு

2027 உலகக்கிண்ணம்: இங்கிலாந்து உட்பட 8 அணிகள் நேரடித் தகுதி

  • August 11, 2026
  • 0 Comments

ICC 14-வது ODI கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ம் ஆண்டு ஒக்​டோபர் 4 முதல் நவம்பர் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்​வே, நமீபியா ஆகிய 3 நாடு​கள் இணைந்து உலகக் கோப்பை தொடரை நடத்த உள்​ளன. தென் ஆப்​பிரிக்​கா​வில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு​நாள் போட்டி உலகக் கோப்பை தொடர் நடை​பெற உள்​ளன. இந்த தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்தத் தொடரில் சில மாற்றங்களை […]

பொதுத்தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், தனது தலைமைத்துவத்தை மாற்றுவது தொடர்பான ஊகங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில், தேசியக் கட்சியின் (National Party) நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர சந்திப்பிற்கு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் (Christopher Luxon) அழைப்பு விடுத்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அரசியல் நெருக்கடியில் நியூசிலாந்து பிரதமர்: ஆட்சி பறிபோகும் அபாயம்

  • August 11, 2026
  • 0 Comments

பொதுத்தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், தனது தலைமைத்துவத்தை மாற்றுவது தொடர்பான ஊகங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில், தேசியக் கட்சியின் (National Party) நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர சந்திப்பிற்கு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் (Christopher Luxon) அழைப்பு விடுத்துள்ளார். “பல்வேறு ஊடக அறிக்கைகள் மற்றும் உரையாடல்கள் மூலம் எனது தலைமைத்துவம் குறித்து அதிக ஊகங்கள் எழுந்துள்ளமை தெளிவாகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் இத்தகைய பிளவுகள் பெரும் கவனச்சிதறலை ஏற்படுத்தும். எனவே, பிரச்சினைக்கு விரைவில் […]

ஆஸ்திரேலியா மத்திய வங்கி (RBA) தனது உத்தியோகபூர்வ வட்டி வீதத்தில் (Cash Rate) மாற்ற எதுவும் செய்யாமல், அதனைத் தொடர்ந்து 4.35 சதவீதமாகவே பேண தீர்மானித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் சரிவு

  • August 11, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மத்திய வங்கி (RBA) தனது உத்தியோகபூர்வ வட்டி வீதத்தில் (Cash Rate) மாற்ற எதுவும் செய்யாமல், அதனைத் தொடர்ந்து 4.35 சதவீதமாகவே பேண தீர்மானித்துள்ளது. ஜூன் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் சற்றுச் சரிவைக் கண்டமை மற்றும் சொத்து விலைகளில் ஏற்பட்ட மிதமான வீழ்ச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறவுள்ள மத்திய வங்கியின் அடுத்த கூட்டங்கள் வரை இந்த வட்டி வீதமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள […]

அரசமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.  அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை மக்கள் எதிர்க்கவில்லை: நீதி அமைச்சர் விளக்கம்

  • August 11, 2026
  • 0 Comments

அரசமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.  அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் எவ்வாறு எதிரணியை ஒடுக்கும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெளிவுபடுத்தினால், அதற்குரிய பதிலை வழங்க முடியும். அவ்வாறு இல்லாமல் வேண்டுமென்றே விமர்சிப்பது ஏற்புடையது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், “இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் ஒரு சுயாதீன அமைப்பாகும். […]

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல்ஆகஸ்ட் 06 வரையான காலப்பகுதிக்குள் 13 லட்சத்து 86 ஆயிரத்து 228 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இலங்கை செய்தி

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

  • August 11, 2026
  • 0 Comments

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல்ஆகஸ்ட் 06 வரையான காலப்பகுதிக்குள் 13 லட்சத்து 86 ஆயிரத்து 228 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து3 லட்சத்து 46 ஆயிரத்து 57 பேரும், பிரித்தானியாவில் இருந்து ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 323 பேரும் , சீனாவில் இருந்து 91 ஆயிரத்து 538 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஜேர்மனியில் இருந்து 81 […]

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (12) நடைபெறவுள்ளது. இலங்கை செய்தி

ஜனாதிபதியை நாளை சந்திக்கிறது சட்டத்தரணிகள் சங்கம்

  • August 11, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (12) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பிலேயே இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் சட்டமூலத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் இரு இடங்களில் எலும்புக்கூடுகள் அடையாளம்

  • August 11, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அருகே எழுமாற்றாக தோண்டப்பட்ட இரண்டு இடங்களிலும் மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 48வது நாள் அகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது செம்மணிப் புதைகுழிக்கு அருகே எழுமாற்றாக இரண்டு இடங்களில் குழிகள் தோண்டப்பட்ட போது, ஒன்றில் தலையற்ற எலும்புக்கூடு உள்ளிட்ட 3 எலும்புக்கூடுகளும் மற்றொன்றில் ஒரு எலும்புக்கூடும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை நேற்றைய அகழ்வின் போது மொத்தமாக 9 மனித எலும்புக்கூடுகள் […]

இந்தியாவின் நடவடிக்கையானது எதிர்கால எல்லைப் பேச்சுவார்த்தைகளில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என சீன நிபுணர்களை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரச ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' (Global Times) செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா செய்தி

இந்தியா, சீனாவுக்கிடையில் மீண்டும் தலைதூக்கும் எல்லைப் பிரச்சினை

  • August 11, 2026
  • 0 Comments

இந்தியாவின் நடவடிக்கையானது எதிர்கால எல்லைப் பேச்சுவார்த்தைகளில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என சீன நிபுணர்களை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரச ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ (Global Times) செய்தி வெளியிட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 27 புவியியல் இடங்களுக்கு இந்தியா முறையான பெயர்களைச் சூட்டியதற்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்தப் பகுதிகள் சீனாவின் ‘சாங்னான்’ (Zangnan) பிராந்தியத்திற்குட்பட்டவை என அரச ஊடகமான குளோபல் டைம்ஸ் உரிமை கோரியுள்ளது. திபெத் தன்னாட்சிப் பகுதியின் ஒரு பகுதியாகச் சீனா உரிமை […]

உலகம்

குழந்தை பருவ தடுப்பூசி உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து – சில தடுப்பூசிகள் நீக்கம்

  • August 11, 2026
  • 0 Comments

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘தங்கத் தர குழந்தை பருவ தடுப்பூசி பரிந்துரைகள்’ ( Gold Standard Childhood Vaccine) என்ற தலைப்பில் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது குழந்தை பருவ தடுப்பூசிகளுக்கான மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மாற்றியமைப்பதோடு, பாடசாலைகளில் தடுப்பூசி தேவைகளை மறுபரிசீலனை செய்யுமாறு மாநிலங்களை வலியுறுத்துகிறது. இந்த புதிய வழிகாட்டுதலில் , குழந்தை பருவ தடுப்பூசிகளை மூன்று தனித்தனி அடுக்குகளாக வகைப்படுத்துகிறது. இதன் மூலம், உலகளவில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 11 முக்கிய தடுப்பூசிகளாகக் […]