உலகம்

சீனாவில் AI தொழில்நுட்பத்தை நம்பிய விவசாயி – ஒரேநாளில் அனைத்தையும் இழந்த பரிதாபம்

  • August 11, 2026
  • 0 Comments

சீனாவில் ஏஐ தொழில்நுட்பத்தை நம்பிய சீன விவசாயி ஒருவர் ஒரே நாளில் தனது மொத்த உழைப்பையும் இழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சீனாவின் சூசோவில் உள்ள 67 வயதான விவசாயி ஒருவர்,   செயற்கை நுண்ணறிவு உதவியாளர் வழங்கிய பூச்சிக்கொல்லி ஆலோசனையைப் பின்பற்றியதால், ஒரே இரவில் தனது 25 ஏக்கர் எள் பயிரை இழந்துள்ளார். அந்தச் செயற்கை நுண்ணறிவு, ஃப்ளூஃபெனாசெட் (flufenacet)  என்ற களைக்கொல்லியைப் பயன்படுத்தப் பரிந்துரைத்ததாகவும், அது களைகளையும் எள் நாற்றுகளையும் அழித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணலையின் […]

ஐரோப்பா

ஸ்டார்லிங்கிற்குப் போட்டியாக இணைய வலையமைப்பை வலுப்படுத்தும் ரஷ்யா

  • August 11, 2026
  • 0 Comments

ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்கிற்குப் போட்டியாக, ரஷ்யா தனது ராஸ்வெட் (Rassvet) செயற்கைக்கோள் இணைய வலையமைப்பை விரைவாக நிறுவி வருவதாக உக்ரேனிய இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. பியூரோ 1440 என்ற விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ராஸ்வெட், தற்போது 16 செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது. 2027 இற்குள்  292 ஆகவும், 2035இற்குள் 924 ஆகவும் இதை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ரஷ்யப் படைகளால் பயன்படுத்தப்படும் கள்ளச் சந்தை முனையங்களைச் செயலிழக்கச் செய்யுமாறு ஸ்பேஸ்எக்ஸிடம் கீவ்  பரிந்துரைத்த பிறகு, உக்ரேனின் ட்ரோன் செயல்பாடுகள் […]

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 539 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணியில் இன்று 15 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 11, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 539 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 49 வது நாளாக நடைபெற்றது. இதன்போது மேலும் 15 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 05 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையவை என சந்தேகிக்கப்படுகின்றது. அத்துடன் அடையாளம் காணப்பட்ட 11மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் முதலாம், இரண்டாம் மற்றும் […]

உலகம் செய்தி

மேற்குக்கரையில் வீடுகள் இடிப்பு: இஸ்ரேலுக்கு ஹமாஸ் கடும் கண்டனம்

  • August 11, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் (West Bank) பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஹமாஸ் அமைப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி அப்துல் ரஹ்மான் ஷதீத் (Abdul Rahman Shadid) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலின் இந்த வீடு இடிப்பு நடவடிக்கை, பாலஸ்தீனிய மக்கள் தங்கள் சொந்த நிலத்தைப் பாதுகாப்பதிலிருந்தும், குடியேற்றவாசிகளின் பயங்கரவாதம் மற்றும் பாசிச ஆக்கிரமிப்பு இராணுவத்தை எதிர்த்துப் போராடுவதிலிருந்தும் அவர்களை ஒருபோதும் பின்வாங்கச் செய்யாது” என்று குறிப்பிட்டுள்ளார். நாப்ளஸ் (Nablus) நகருக்கு […]

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்துள்ளது. செய்தி

எபோலா வைரஸ்: கொங்கோவில் 2000 இற்கு மேற்பட்டோர் பலி

  • August 11, 2026
  • 0 Comments

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்துள்ளது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, வைரஸ் மிக அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் குறைந்தது 1,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை வரையிலான தகவல்களின்படி, கொங்கோவின் ஐந்து மாகாணங்களில் மொத்தம் 4,381 எபோலா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 2,011 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆபிரிக்க நாட்டில் […]

இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைந்த அபிவிருத்திக்கு 100 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

  • August 11, 2026
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி 2026 – 2031 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2026.02.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் […]

ஐரோப்பா

புதிய டிஜிட்டல் நுழைவு முறை அமுல்படுத்தப்படுவதை தாமதப்படுத்த பரிசீலனை

  • August 11, 2026
  • 0 Comments

கடுமையான எல்லைக் குழப்பங்களையும் விமான நிலைய நெரிசல்களையும் தடுப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் தனது டிஜிட்டல் நுழைவு/வெளியேறுதல் முறையை முழுமையாகச் செயல்படுத்துவதை தாமதப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதனை செயற்படுத்துவற்கு இறுதிநாளாக செப்டம்பர் 6 ஆம் திகதி காலகெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பிறகும் தாமதப்படுத்த பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து போக்குவரத்துச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டருடன் (Heidi Alexander) நடத்திய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, பயோமெட்ரிக் சோதனைகள் இடைநிறுத்தப்படலாம் என்று ஐரோப்பிய ஒன்றியப் போக்குவரத்து ஆணையர் அப்போஸ்டோலோஸ் […]

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதிக்கு மரண தண்டனை உலகம் செய்தி

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை

  • August 11, 2026
  • 0 Comments

சிரியாவில் சுமார் 14 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக, நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் (Bashar al-Assad), அவரது சகோதரர் மஹர் அல்-அசாத் மற்றும் உறவினரான அதேப் நஜீப் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. டமாஸ்கஸில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வழங்கிய இந்தத் தீர்ப்பில், 2024 டிசம்பரில் பதவி கவிழ்க்கப்பட்டு தற்போது ரஷ்யாவில் அகதியாக வாழும் பஷார் அல்-அசாத்திற்கு எதிராக திட்டமிட்ட கொலை, சித்திரவதை மற்றும் மனிதகுலத்திற்கு […]

ஐரோப்பா

பிரான்ஸில் ரோந்து சென்ற இரு அதிகாரிகள் மீது கத்திகுத்து தாக்குதல்

  • August 11, 2026
  • 0 Comments

பிரான்ஸில் இரண்டு மாநகராட்சி காவல்துறையினர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வில்சன் மாவட்டத்தில் உள்ள ரூ டி’ஆஸ்டர்லிட்ஸ் (d’Austerlitz) தெருவில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு அதிகாரிகளும் ரோந்து சென்றுக்கொண்டிருந்தபோது ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர் தாக்குதலை நடத்தியுள்ளார். சந்தேக நபர் மூன்று கத்திகளை வைத்திருந்ததாக பிரெஞ்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர், அதிகாரிகளை நோக்கி சைகை காட்டிய பின்னர் அவர்களை அணுகி, கத்தியுடன் அவர்கள் மீது பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. […]

செய்தி விளையாட்டு

2027 உலகக்கிண்ணம்: இங்கிலாந்து உட்பட 8 அணிகள் நேரடித் தகுதி

  • August 11, 2026
  • 0 Comments

ICC 14-வது ODI கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ம் ஆண்டு ஒக்​டோபர் 4 முதல் நவம்பர் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்​வே, நமீபியா ஆகிய 3 நாடு​கள் இணைந்து உலகக் கோப்பை தொடரை நடத்த உள்​ளன. தென் ஆப்​பிரிக்​கா​வில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு​நாள் போட்டி உலகக் கோப்பை தொடர் நடை​பெற உள்​ளன. இந்த தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்தத் தொடரில் சில மாற்றங்களை […]